Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வானம்பாடியின் திரை துளிகள்
#3
மும்பை, பிப். 22- சர்ச்சையில் சிக்கியுள்ள சின்ஸ் படத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் போர்க்கெடி தூக்கியுள்ளன.

பிரபல இந்தி பட இயக்குநர் வினோத்பாண்டே. இவர் …சின்ஸ் (பாவங்கள்) என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 25-ந்தேதி இந்தியா முழு வதும் திரையிடப்படுகிறது. ஆனால் இந்த படத்தை திரை யிடக்கூடாது என்று கத்தோ லிக்க கிறிஸ்தவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள் ளன.

சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள …சின்ஸ் படம் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரை பின் னணியாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இறை பணியில் ஈடுபட்டு உள்ள அந்த பாதிரியார், தன்னை விட பாதிவயது குறைந்த இளம் பெண் ஒருவரு டன் காதல் வயப்படுகிறார். அந்த பெண்ணு டன் தகாத உற விலும் ஈடுபடு கிறார். இதுதான் படத்தின் கதை. படத்தில், இளம்பெண்ணாக பிரபல இந்தி நடிகை சீமா ரமணியும், பாதிரியாராக ஷைனி அகுஜாவும் நடித்து உள்ளனர். இவர்கள் இருவரும் நெருக்கமாக நடித்திருக்கும் காட்சிகள் வடஇந்தியா முழு வதும் போஸ்டர்களாக ஓட்டப் பட்டு உள்ளன.

இந்நிலையில் இந்த படத்தை திரையிடக் கூடாது என்று படத்தின் தயாரிப்பாள ரும், இயக்குநருமான வினோத் பாண்டேவிடம் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத் து உள்ளன. ஆனால் அவர் அதை ஏற்க தயாராக இல்லை. இதையடுத்து மும்பையில் நாளை மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த கிறிஸ்தவ அமைப்புகள் ஏற்பாடு செய்து உள் ளன.

இது குறித்து படத்தின் இயக்கு நர் வினோத் பாண்டே கூறுகை யில், 1988-ம் ஆண்டு கேரளா வில் ஒரு பாதிரியாரின் வாழ்க்கை யில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு படத்தை எடுத்து உள்ளேன். இந்த படத்தின் டிரையிலரை வெளி யிட கூட டி.வி. சேனல்கள் மறுத்து விட்டன. ஆனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அதை தாண்டி எனது படம் வெளி வரும் என்று கூறினார்.

படத்தின் கதாநாயகி சீமா ரமணி கூறுகையில், ஒரு உண்மை சம்பவம் படமாக எடுக் கப்பட்டு உள்ளது. யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு ஆசைகள் இருக்ககூடாது என்று சொல்வது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்புகிறார்.

படத்தின் கதாநாயகன் ஷைனி அகுஜா கூறுகையில், படத்தின் கதைக்கேற்ப சில காட்சிகள் விரசமாக இருக்கும். எனது கேரக்டர்படி, படத்தின் முதல்பாதியில் நான் பக்தியுள்ள ஒரு பாதிரியாராக வருவேன். மீதி பாதியில் ஒரு இளம் பெண் ணோடு காதல்வயப் பட்டு உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையில் போராட்டம் நடத்தும் ஒரு கேரக்டராக வருகிறேன் என்று கூறினார்.

சர்ச்சைக்குரிய …சின்ஸ் படத்திற்கு தணிக்கை குழு …ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கிறிஸ் தவ அமைப்புகள் தணிக்கை குழுவிடம் கோரிக்கை விடுத்து உள்ளன. 23-ந்தேதி (நாளை) போராட்டத்திற்கு பின்னரும் படம் வாபஸ் பெறப்படா விட் டால் எங்கள் போராட்டம் கடுமையாக வலுவடையும் என்று கிறிஸ்தவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.
தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சர்ச்சையில் சிக்கியுள்ள சின்ஸ் - by Vaanampaadi - 02-22-2005, 12:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)