Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வானம்பாடியின் திரை துளிகள்
#2
நடிகை சிம்ரன் இடுப்பு மெலிய ஆபரேஷன் - லண்டனில் நடக்கிறது

சிம்ரன்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/22/cinema/C11_Simran3.jpg' border='0' alt='user posted image'>

சென்னை, பிப். 22- நடிகை சிம்ரன் லண்டன் ஆஸ்பத்திரியில் தன் இடுப்பு மெலிய ஆபரேசன் செய்கிறார்.

தமிழில் கடந்த 5 வருடமாக கொடி கட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். வி.ஐ.பி. படம் மூலம் அறிமுகமான சிம்ரன் தமிழில் கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். அவரது இடையழகு ரசிகர்களை மயக்கியது. திடீரென்று சிம்ரன் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். திருமணத்துக்கு பிறகு விஜய்யுடன் நடிக்க வேண்டியிருந்த -உதயா என்ற படத்தை மட்டும் நடித்துக்கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கலாமா, ரசிகர்கள் மீண்டும ;கதாநாயகியாக ஏற்றுக்கொள்வார்களா என்று பல தயாரிப்பாளர்களிடம் சிம்ரன் கருத்து கேட்டார். அப்போது அவர்கள் உடம்பை கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள். அதனால் கதாநாயகியாக தொடர்ந்து நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்கள்.

ஆனாலும் தனது உடற்கட்டை இன்னும் கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள சிம்ரன் விரும்பினார். அதுபற்றி டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் உங்கள் இடையை மெலிவடைய ஆபரேஷன் செய்துகொண்டால் மிகவும் கவர்ச்சியாக இருப்பீர்கள் என்று யோசனை கூறினார்கள். இதையடுத்து ஆபரேஷன் செய்துகொள்வது என்று முடிவு செய்தார். -கிச்சா வயது 16 என்ற படத்தில் சிம்ரன் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதில் ஜெய்ஆகாஷ், மணிகண்டன் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். ராஜகோபால் டைரக்டு செய்கிறார். இப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சிம்ரன் தற்போது இடை மெலிவு ஆபரேஷனுக்காக லண்டன் சென்றிருக்கிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டு சென்ற அவருக்கு அங்குள்ள பிரபல மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடக்கிறது.

புத்தம்புது தோற்றத்தில் சிம்ரன் திரையுலகில் நுழைந்து புது நடிகைகளுக்கு ஒரு சவாலாக இருப்பார் என்று பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே நடிகைகள் ரம்பா, மும்தாஜ் சங்கவி போன்ற நடிகைகள் உடல் மெலிவதற்கான ஆபரேஷன் செய்துகொண்டு திரையுலகில் மீண்டும் ஒரு சுற்று வந்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நடிகை சிம்ரன் இடுப்பு மெலிய ஆபரேஷன் - by Vaanampaadi - 02-22-2005, 12:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)