Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வானம்பாடியின் திரை துளிகள்
#1
தீவிரவாதியுடன் தொடர்பு: நக்மா, மும்தாஜிடம் நேரில் விசாரணை- மும்பை போலீசார் சென்னை வருகை

மும்பை, பிப். 22-

நடிகை நக்மாவுக்கு மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதியின் கூட்டாளியான ஜம்போ ரூ. 10 லட்சம் கொடுத்ததாக அளித்த வாக்குமூலம் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தாபூத்இல்ராகிம் தம்பி அனீசுக்கும் நக்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும் அவன் கூறியுள்ளான்.

ஐம்போ குறிப்பிட்ட நக்மா யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

ஜோதிகாவின் அக்காவும் நடிகையுமான நக்மா தான் அவள் என்று முதலில் கூறப் பட்டது. ஆனால் நக்மா அதை மறுத்தார். தீவிரவாதியுடன் தனக்கு தொடர்பு கிடையாது அவன் பணம் கொடுத்ததாக சொல்லும் நக்மா நான் அல்ல. வேறு பெண் என்று அவர் கூறினார். தீவிரவாதி பணம் கொடுத்ததாக சொல்லும் பந்தரா பகுதியில்தான் வசிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து சந்தேகப் பார்வை கவர்ச்சி நடிகை மும்தாஜ் பக்கம் திரும்பியது. இவர் டி.ராஜேந்தரின் மோனிசா என் மோனலிசா படம் மூலம் தமிழுக்கு அறி முகமானவர்.

மும்தாஜுக்கும் நக்மா என்று இன்னொரு பெயர் இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மும்பையில் பிறந்து வளர்ந்த மும்தாஜ் பிரபல தயாரிப்பாளர் தபாசு கானின் மகள் ஆவார். பூண்ட் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்.

மும்தாஜுன் தாயார் 2000_ம் ஆண்டில் மும்பை தாதாக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது. அவர் தற்போது லண்டனில் வசிக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகளை மும்தாஜ் மறுத்தார். எனக்கு நக்மா என்று இன்னொரு பெயர் இருப்பது உண்மைதான். ஆனால் ஜம்போ வாக்கு மூலத்தில் கூறி உள்ள காலகட்டத்தில் நான் சிறுமி அவன் சொல்லி இருப்பதுபோல பந்த்ரா பகுதியில் நான் வசிக்க வில்லை. என்தாயுடன் வெர்சோ என்ற பகுதியில் வசித்தேன். பந்த்ராவில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தேன்.

போலீசார் ஆயுதம் வைக்திருந்ததாக என் தாயாரை கைது செய்யவில்லை. என் தாய் பெயர் தபசும்கான் என்பதும் தவறு. அவர் பெயர் ருபினாகான் லண்டனில் வசிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

நக்மா, மும்தாஜின் முரண்பட்ட தகவல்கள் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரில் தீவிரவா தியுடன் தொடர்பு வைத்திருந்தவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறு கிறார்கள்.

நக்மா தற்போது மும்பை யில் உள்ளார். சென்னைக்கும் அவ்வப்போது வந்து செல்கிறார். இங்கு அவருக்கு சொந்த வீடு உள்ளது. சில நேரம் அபிராம புரத்தில் உள்ள தங்கை ஜோதிகா வீட்டிலும் தியாகராஜ நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலிலும் தங்குவார்.

அந்த இடங்களை போலீசார் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

மும்தாஜ் சென்னையிலே தங்கி படங்களில் நடித்து வருகிறார்.

தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருந்தது நக்மாவா, மும்தாஜா என்று நேரில் விசாரணை நடத்த மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் அவர்கள் சென்னை வர இருப்பதாக கூறப்படுகிறது.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வானம்பாடியின் திரை துளிகள் - by Vaanampaadi - 02-22-2005, 12:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)