Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வானம்பாடியின் உலகம்
#10
கணவர் குணமானதால் நேர்த்திக்கடன்: கழுத்தை அறுத்து உயிர்விட்ட பெண்

நகரி, பிப். 22-

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொத் தூரை அடுத்த நிவகாம் பகு தியை சேர்ந்தவர் ஆனந்தராவ் (வயது48). இவரது மனைவி லட்சுமிகுமாரி (45).

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆனந்தராவ் நோயின் பிடியில் சிக்கி படுத்த படுக் கையானார். இதனால் பயந்து போன லஷ்மிகுமாரி அங் குள்ள நீலாத்ரிஅம்மன் கோவி லுக்கு சென்று மணிக்கணக் கில் அமர்ந்து பூஜை செய்தார். அப்போது கணவர் குணம டைந்தால் தனது கழுத்தை அறுத்து காணிக்கை செலுத்து வதாக வேண்டினார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த ராவ் குணமடைந்தார். படுக் கையை விட்டு எழுந்த அவர் தனது வழக்கமான வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த லஷ்மிகுமாரி காலையில் நேராக அம்மன் கோவிலுக்குச் சென்றார். சிலமணி நேரம் பூஜை செய்த அவர் திடீரென "தாயே என் கணவரை குணப் படுத்தியதற்காக தலையை உனக்கு காணிக்கை செலுத்து கிறேன்" என்றபடியே கத்தி யால் தனது கழுத்தை அறுத் தார்.ரத்தவெள்ளத்தில் அல றியபடியே அம்மன்சிலை முன்பு விழுந்த அவர் சுருண்டு விழுந்து இறந்துபோனார்.

மதிய வேளையில் அந்த கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்கள் லஷ்மிகுமாரி அம்மன் சிலை முன்பு பிண மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

கோவிலில் சோதனை நடத்தியபோது லஷ்மிகுமாரி தனது கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் அவர் கூறி யிருப்பதாவது:_

கடந்த 6 மாதத்திற்கு முன்பு நீங்கள் நோயால் படுத்த படுக்கையாக இருந்தபோது நீலாத்ரி அம்மனிடம், நீங்கள் குணமடைந்தால் என் கழுத்தை அறுத்து காணிக்கை செலுத்துவதாக வேண்டி னேன். அதனால் அம்மன் உங்களை குணமாக்கி இருக் கிறார்.

நான் வேண்டிக்கொண்ட படிதற்போது அம்மனுக்கு கழுத்தை அறுத்து காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் முடித்து விட்டேன்.

இனி நீங்கள் மகன்கள் ஸ்ரீதர், பிரவீன், மகள் ராஷ்மி ஆகியோரை நன்றாக கவனித் துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நமது கிராமத்து தேவதையான நீலாத்ரி அம்மன் துணையாக இருப்பாள் என்று குறிப்பிட்டிருந்தார்.

நேர்த்தி கடன் செலுத் துவதற்காக அம்மன் கோவிலில் லஷ்மிகுமாரி கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-21-2005, 09:05 PM
[No subject] - by sinnappu - 02-22-2005, 12:16 AM
[No subject] - by kavithan - 02-22-2005, 01:24 AM
[No subject] - by Vaanampaadi - 02-22-2005, 11:45 AM
கணவர் குணமானதால் நேர்த்திக்கடன்: கழுத்தை அறுத்து உயிர்விட்ட - by Vaanampaadi - 02-22-2005, 11:51 AM
[No subject] - by kavithan - 02-22-2005, 10:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)