02-22-2005, 11:45 AM
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/22-2-2005/22charles.jpg' border='0' alt='user posted image'>
சார்லஸ் -கமீலா ஜோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி திடீர் தடை
லண்டன், பிப்.22-
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் திருமணத்துக்குப் பிறகு புதுமனைவி கமீலா வுடன் அமெரிக்கா செல்ல இருக்கிறார். கமீலா விவாக ரத்து செய்தவர் என்பதால் அவர் வெள்ளை மாளிகைக்குள் நுழைய ஜனாதிபதி புஷ் தடை விதித்து இருக்கிறார்.
இளவரசர் சார்லஸ் தன் மனைவி டயானாவை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு ஒரு விபத்தில் டயானா இறந்து போனார். திருமணத்துக்கு முன்பே கமீலா பார்க்கரைக் காதலித்துவந்த சார்லஸ், அவரை வருகிற ஏப்ரல் மாதம் 8-ந் தேதி திருமணம் செய்து கொள்ளஇருக்கிறார்.
திருமணத்துக்குப்பிறகு முதல் முறையாக இளவரசர் புதுமனைவியுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார். சார்லஸ் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வது கடந்த 3 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டது.
அமெரிக்கா செல்லும் சார்லசை வரவேற்று வெள்ளை மாளிகையில் விருந்து கொடுக்கவும் புஷ் திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில்தான் சார்லஸ்_ கமீலா திருமணம் முடிவானது.
திருமணத்துக்குப்பிறகு மனைவியையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா செல்ல சார்லஸ் விரும்பினார்.
ஜனாதிபதி புஷ் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளில் ஆழ்ந்த பிடிப்பு உடையவர். வலதுசாரி எண்ணம் கொண்டவர். அவரால் கருக்கலைப்பு விவாகரத்து ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. விவாகரத்து செய்த கமீலாவை வரவேற்று வெள்ளை மாளிகையில் விருந்து அளிப்பது பொருத்தமற்றது என்று புஷ் தன் உதவியாளர்களிடம் கூறினார்.
மேலும் கமீலாவை வரவேற்று விருந்து கொடுப்பதை அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும் புஷ் கருதுகிறார்.
இளவரசி டயானாவை அமெரிக்க மக்கள் இன்னமும் நேசிக்கிறார்கள். இளவரசருடன் டயானா மண வாழ்க்கை முறிந்ததற்கு கமீலாதான் காரணம் என்று அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். எனவே கமீலாவை வரவேற்பது அமெரிக்க மக்களின் எண்ணத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று புஷ் அஞ்சுகிறார்.
இதனால்தான் கமீலாவை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பது இல்லை என்று புஷ் தீர்மானித்து இருக்கிறார்.
புஷ்சின் இந்த முடிவு இங்கிலாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. இது சார்லஸ்-கமீலா ஜோடிக்கு வருத்தத்தை அளித்து உள்ளது. அதனால் சார்லஸ் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்வாரா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
Maalaimalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>