Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காஷ்மீரில் வரலாறு காணாத பனிச்சரிவு கிராமங்கள் புதையுண்டன
#2
<b>காஷ்மீர் கொட்டும் பனிக்கு 130 பேர் பலி </b>

<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/22/others/C196_kasmir.jpg' border='0' alt='user posted image'>
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பனிப்பொழிவில்
சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தினர்

காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி 130 பேர் பலியாகி உள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கடுமையாக தற்போது பனிப்பொழிவு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளைவெளேரென்று பனி மயமாக காட்சி அளிக்கிறது. வீடுகள் மீது பனி , மரம் , செடி கொடிகள் மீது பனி படர்ந்து விடுகிறது. இரவில் ஒரு காரை அல்லது ஸ்கூட்டரை வெட்ட வெளியில் நிறுத்தி விட்டு காலையில் பார்த்தால் பனியால் அவை மூடிக் கொள்ளப்பட்டு விடுகின்றன.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீநகர் பகுதியில் பனி கட்டிகள் சரிந்து விழுந்தன. அவை பனிமலை ஓரத்தில் அமைக்கப்பட்டு இருந்த மர வீடுகள் மீது விழுந்து அமுக்கின. இதனால் வீடுகளும் உடைந்து பனியோடு பனியாக மூழ்கின. இது போன்ற விபத்துக்களால் சுமார் 125 பேருக்கும் மேல் உயிர் இழந்து விட்டார்கள்.

100 பேரை காண வில்லை. அவர்கள் பனி மலைக்குள் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேற்று 26 குழந்தைகள் , 18 பெண்கள் உள்பட 66 சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பனிக்குள் அமுங்கி கிடந்த 20 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். பூஞ்ச் மாவட்டம் , தோடா மாவட்டம் ஆகியவற்றில் இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டன. கடந்த 3 நாட்களாக தினமும் சராசரி 12 அடி உயரம் அளவுக்கு பனி பொழிவு ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த 48 மணி நேரத்தில் 200 வீடுகள் பனியின் பாரம் தாங்காமல் உடைந்து பனிக்குள் விழுந்து மூழ்கி போனதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீர் அரசாங்கள் இந்த விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. உயிர் இழந்தவர்களின் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 50 ஆயிரம் , காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

தினகரன்
Reply


Messages In This Thread
காஷ்மீர் கொட்டும் பனிக்கு 130 பேர் பலி - by vasisutha - 02-22-2005, 05:33 AM
[No subject] - by Mathan - 02-22-2005, 08:32 AM
[No subject] - by vasisutha - 02-22-2005, 06:27 PM
[No subject] - by tamilini - 02-22-2005, 06:29 PM
[No subject] - by kavithan - 02-23-2005, 12:32 AM
[No subject] - by shiyam - 02-23-2005, 03:31 AM
[No subject] - by Mathan - 02-23-2005, 03:33 AM
[No subject] - by shiyam - 02-23-2005, 03:37 AM
[No subject] - by vasisutha - 02-23-2005, 03:46 AM
[No subject] - by Mathan - 02-23-2005, 04:09 AM
[No subject] - by tamilini - 02-23-2005, 01:48 PM
[No subject] - by kavithan - 02-24-2005, 01:26 AM
[No subject] - by vasisutha - 02-24-2005, 01:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)