02-22-2005, 01:43 AM
நிச்சயமாக சியாம். எம்மவர்கள் பலர் அனுபவிக்கின்ற பெரும் பிரச்சனை இது.ஆனால் எம்மவர்களிடம் இருக்கும் பழக்கத்தை நினைக்கும் போது வேதனை தான் மிஞ்சுகின்றது. கடந்த வருடம் தமிழர்இல்லம் எனும் அமைப்பு சுவிஸ்அரசின் உதவியை பெற்று பெண்களுக்கான பிரத்தியேக வகுப்பை ஒழுங்கு செய்திருந்தார்கள். பெண் உடற்கூற்றியல் நிபுணர்கள் மொழிபெயர்ப்பு உதவியுடன் முற்றிலும் பெண்களே பங்குபற்றும் இவ்வகுப்பிற்கு சில பேரையாவது அனுப்பி வைக்கலாம் என நான் முயற்சி செய்தேன். மிஞ்சியது ஏமாற்றம் தான்.ஏதோ எங்கள் அழைப்பிற்காக பங்குபற்றிய சிலருடன் கடந்த வருடம் அந்த வகுப்பு நடைபெற்றது. இவ்வாண்டில் அவ்வமைப்பே அந்த உதவியை நிராகரித்து விட்டதாம். காரணம் அரச உதவியை பெற்ற பின்னர் வகுப்புகளுக்கு எம்மவர்கள் ஒழுங்காக வராவிடின் அரசு அந்த அமைப்பை சந்தேகிக்கலாம் என்பதால். ஒரு அரச உதவி பெறுவது இந்த நாட்டில் எவ்வளவு சிரமம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவ்வாறு கிடைத்ததை பயன்படுத்த எம்மவர்களுக்கு முடியவில்லை. ஆனால் மலிவுவிற்பனை என்றால் அயல்வீட்டு பகைமறந்து அவர்களில் காரில் இடம் கேட்டு ஏறிவரும் எம்மவர்களை என்னவென்பது????
.
.!!
.!!

