08-24-2003, 01:23 PM
நன்றி பரணி,
[u]"**மலையாள சினிமாவிலும்**
உங்கள் எழுத்துகளிலேயே எனக்கு தேவையான பதில் கிடைத்து விடுவது எனது
அதிஸ்டம்தான்.
(நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னா புரியுமா ? என்பது போல உங்களுக்குள்ளேயே விடை இருப்பதை நான் அறிவேன்;.)
ஆரம்ப கால கட்டங்களில் இருந்த மலயாளப் படங்களின் தரம், மாறுபட்டு தற்போது தமிழ் பட (நிலை போல) உலகை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.
அதற்கு காரணம் மலையாள தொழில் நுட்பத் துறையினரின் , நடிகர்களின் தமிழ் சினிமாவுக்குள்ளான வருகையும் , வியாபாரமும்.
தமிழ் (மக்களுக்கும்) ரசிகர்களுக்கும், மலையாள(மக்களுக்கும்) ரசிகர்களுக்குமிடையே சில வேற்றுமைகள் உண்டு. மலையாளிகள் இல்லாத நாடே இல்லை என்று தெரிந்தவர்களுக்குத் நன்கு தெரியும். அது அவர்களது கல்வி தராதரம் மற்றும் தம் மக்கள் அனைவரும் முன்னேற வேண்டுமென நினைக்கும் கேரள அரசியல் தன்மைகளின் வெளிப்பாடு.
அவர்களைப் பற்றி ஒரு நகைச்சுவை துணுக்குண்டு :
நீல் ஆம்ஸ்ரோங் அப்பலோ .13ல் போய் சந்திரனில் காலடியெடுத்து வைத்த போது ஒருவர் ஓடி வந்து சாயா சாயா என்று நீல் ஆம்ஸ்ரோங்கிடம் பால் தேனீரை நீட்டினாராம்.
யார் நீ ? என்று நீல் ஆம்ஸ்ரோங் கேட்டபோது :
ஞான் ஒரு மலையாளியாக்கும் என்றாராம்.
நான்தான் முதலில் காலடியெடுத்து வைத்துவன் நீ எப்படி வந்தாய்? என்று நீல் கத்திய போது
பதிலுக்கு சிரித்தவாறே:
இவ்வளவு செலவழிக்க வேண்டியதில்லை கொச்சின் எக்ஸ்பிரஸ் 2ம் வகுப்பு டிக்கட் எடுத்தால் போதும் இங்கு வர. . . . .
என்று சொல்லி விட்டு சாயாவைக் கொடுத்தாராம் அந்த மலையாளி...........................
உலகின் எந்த மூலையிலும் இவர்களைப் பார்க்கலாம் என்பதற்காக சொல்லப்பட்டும் ஒரு வினோதமான கதைதான் இது.
அப்படியான இவர்கள் தமது சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்கள். அவர்களுக்கு அவர்களது தாய் மொழி மற்றும் முக்கிய மொழி மலையாளமாகவே இருக்கும் ஆனால் அவர்களில் அனைவருக்கும் உதவி மொழியாக அல்லது துணை மொழியாக (1) ஆங்கிலம் (2) ஹிந்தி (3) தமிழ் (4) கன்னடம் (5) தெலுங்கு (6) உருது (7) படகாஸ் (ஊட்டி பகுதி பழங்குடியினர் பேசும் தமிழ்-மலையாள கலப்பிலான பேச்சு மொழி. நடிகர் கார்த்திக்கின் மனைவி இந்த மொழியைப் பேசுபவர்.) ஆகிய மொழிகள் தெரியும்.
[u]ஒன்று மட்டும் நிச்சயமாக அனைத்து மலையாளிகளுக்கும் மலையாளம் தவிர்த்து (1) ஆங்கிலம் (2) ஹிந்தி (3) தமிழ் ஆகிய மொழிகள் கொஞ்சமாவது நிச்சயம் தெரியும்.
அதனால்தான் இந்தியா முழுவதும் இன-மத-சாதி பிரச்சனைகளும், இவ் வழியிலான குப்பை அரசியலும் தலை விரித்தாடினாலும் , கேரளாவில் மட்டும் அவை தலை தூக்காமல் ஹிந்து - கிறிஸ்தவ - முஸ்லிம் சமூகங்களிடயே ஒற்றுமையும் சம அந்தஸ்த்தும் காணப்படுகிறது. ஓருவரது அபிலாசைகளை புரிந்து கொள்ளக் கூடிய, மற்றவருக்கு எடுத்தியம்பக் கூடிய ஒரு முக்கிய பங்கை வகிப்பது மொழிதான். அது கேரளாவின் ஒற்றுமைக்கு வழி வகுத்து நிற்கிறது.
அது போல் சிங்கப்புூர் நாட்டு தன்மைகளையும் குறிப்பிடலாம்.
சிங்கப்புூரில் சீன-மலாய - இந்திய (பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இலங்கையரும் இந்த பகுதியில்தான் சேர்க்கப் பட்டுள்ளனர்.) மக்கள் வாழ்கின்றனர்.
சிங்கப்புூர் சீனரின் முக்கிய மொழிகளாக <i>மன்டரீன், ஹொகியன்,கென்தனிஸ்</i> ஆகிய மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும் அவர்களது பொது மொழியான <b>ஹொகியன்</b> மொழியும், மலாயரின் <b>மலாய்</b> மொழியும் , இந்தியரின் <b>தமிழ்</b> மொழியும் ,
<b>ஆங்கிலம்</b> அனைவருக்குமான பொது மொழியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன், பாடசாலைகளில் ;
அனைத்து மாணவர்களும் பொது மொழியான <b>ஆங்கிலத்தைக்</b> கற்பதுடன்
<b>சீனர்கள் , தமது இரண்டாவது மொழியாக ஹொகியன் மொழியையும்,
மலாயர் தமது இரண்டாவது மொழியாக மலாய் மொழியும்,
இந்தியர்கள் தமது இரண்டாவது மொழியாக தமிழ் மொழியும் கற்க வேண்டுமெனும்
கட்டாயச் சட்டம் 1980களில் அமுலுக்கு வந்தது.</b>
இந்தியர்களில் (1) ஹிந்தி (2) தமிழ் (3) கன்னடம் (4) தெலுங்கு (5) உருது பேசுவோருக்கு தமிழ் கற்றுக் கொள்வதில் சிரமம் இருந்ததால் அவர்கள் <b>1.ஹொகியன் 2.மலாய் 3.தமிழ் </b>ஆகிய மொழிகளுள் ஏதாவது ஓரு விரும்பிய மொழியைத் தேர்வு செய்யும் உரிமையை மாணவர்கள் வசம் விட்டு விட்டனர்.
இக்கால கட்டத்தில் 1000 முதல் 3000 பிரதி வரை மட்டுமே விற்பனையாகிக் கொண்டிருந்த, தமிழ் வளர்த்த தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களது தனி முயற்சியால் வெளி வந்து கொண்டிருந்த தமிழ் முரசு பத்திரிகையின் விற்பனை 3000லிருந்து 12000 வரை எகிறியது. இன்றும் தமிழை வாசிப்போம் தமிழை நேசிப்போம் எனும் இயக்கமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
தவிர அங்கு அரசியலுக்கு வரும் எவரும் சிங்கப்புூர் பல்கலைக்கழகங்களில் அரசியல் துறைசார்ந்த பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்ட ஒன்று. சிங்கப்புூரை உருவாக்கிய பெரு மதிப்புக்குரிய லீ குவான் யூ அவர்களுக்கு வலதுகரமாக செயல்பட்டவர் இலங்கையை தாயமாகக் கொண்ட திரு.இராஜரத்தினம் அவர்கள் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியல் களத்தில் எமது உரிமைகளை முடிந்த போது கோட்டை விட்டு , மொழியை வைத்து பகடை நாடகமாடி வயிறு வளர்த்த நம் ஆரம்பகால சுயநல அரசியல்வாதிகள், திட்டமிட்டே தமது சுயநல அரசியல் லாபங்களுக்காகவும், வாக்கு வங்கிகளுக்காகவும் திறம்பட நடித்து அரங்கேற்றியதன் பயனாக, நமது சமூகம் இன்று அல்லல் படுகிறது. ஆனால் அந்த அரசியல்வாதிகளும் அவர்களது குழந்தைகளும் மட்டும் இதற்கு விதி விலக்காக செயல்பட்டது.அவர்களது பரம்பரை மட்டும் எல்லா நாடுகளுக்கும் சென்று, எல்லாம் கற்று............ விதைத்தது யாரோ வினை அறுப்பது யாரோ ?
ஒரு மனிதனுக்கு பல மொழிகள் தெரிந்தால் அவன் ஒருவனாக அல்ல பலராக (4 மொழி தெரியுமானால் 4 மனிதர்களுக்கு சமமாக) கருதப்படுகிறான் என்பது மலையாளிகள் சொல்லும் ஒரு முக்கியமான வசனம்.
அது அவர்களது முன்னேற்றத்துக்கும், புரிந்துணர்வுக்கும் அடி கோலுகிறது. ரசிகர்களின் பகுத்தறிவு தராதரத்தை வைத்தே அவரவர் படைப்புகள் உருவாகின்றது.
நாம் வளரும் போதும் ஏனைய சமூகங்களையும் அவர்களது படைப்புகளையும் பார்க்கும் போதும் எமக்கு வெளியே நின்று எம்னமப் பார்க்கும் நிலைக்கு நாம் வரும் போதும் நம்மில் நிச்சயம் வித்தியாசங்கள் நிகழும் . . . . .
தயவு செய்து குழந்தையாக அடம் பிடிக்காமல் வெளிச்சத்துக்கு வாருங்கள் . . .
அன்புடன்
அஜீவன்