Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணீரில் நீந்துமெங்கள் தேசம் கழுவி
#1
கண்ணீரில் நீந்துமெங்கள் தேசம் கழுவி
செந்நீராய் ஓடுமினி பகைவர் குருதி.

அந்நாளில் கொடிநாட்டி அடித்த கொட்டம்
இந்நாளில் வந்ததவர் தலைக்கே நட்டம்.

மலைமுகட்டு நீர்வெள்ளம் பள்ளம் நோக்கி
குமுகுமுக்கப் பாய்ந்ததுபோல்- புலிகள் சேனை

செந்தணலாய் செருக்களத்தில் வந்தே பாய்ந்தார்
செல்கிறது பகைவெள்ளம் கடலில் பாய.

ஐந்தாண்டு முன்னாலே படை நடத்தி
இழிபகைவர் யாழ்மண்ணில் காலை வைத்தார்.

அன்னவர்கள் அந்தன்று இரண்டுவழி சொன்னார்
தமிழ்மாந்தர்க் கினியுய்வு இல்லை யென்றே.

சயனைட்டை உள்ளெடுத்தால் மரணம்ää இல்லை
கடலில்தான் பாயவேண்டும் புலிகள் என்றார்.

இன்றவர்கள் படைகளுக்கே அந்தச் சோகம்.
ஐயோஅப் பகைகழுத்தில் சயனைட் இல்லை.

முக்காலில் உலவுகின்றான்ää விலங்கைப் போலும்
மூர்க்கனவன் மந்திரியாய் ஆனான். மேலும்

மூவுலகும் பொய்ச்செய்தி திரிக்க வெண்ணும்
மூடரவர் சிந்தனையை என்ன சொல்ல.?

உயிர்பிழைக்க நாம்கொடுத்த காலம் தன்னில்
ஓடாத பகைவனவன் சிரங்கள் கொய்தே

பூந்தொட்டி யாய்ஆக்கி நாளை நல்ல
மலர்ச்செடிகள் இட்டுஅதில் நாம் வளர்ப்போம்.

செம்மணியில் சிறுக்கர்களின் செயலுக் கெல்லாம்
செருக்களத்தில் கணக்கெடுத்து சிர மறுப்போம்.

போரென்று சொல்லியினி பகைவர் வந்தால்
அவர்காலை யுடைத்தெங்கள் அடுப் பெரிப்போம்.

அப்போரில் எம்வீரர் மண்ணில் வீழ்ந்தால்
மாவீரர் என்றெங்கள் மண்ணில் விதைப்போம்.

பாதகர்கள் என்றெம்மை உலகம் பேசின்
பேசட்டும் நாமெங்கள் வேலை முடிப்போம்.

மாவீரர் கனவையெங்கள் நெஞ்சில் வைப்போம்
அவர்பாதை தனிலெங்கள் காலை வைப்போம்.

புத்தாயிரக் கார்த்திகைத் திங்கள் ஒன்றில்
புகுந்திடுவார் புலிவீரர் எங்கள் மண்ணில்.

மேகத்தில் மலர்ச்செடிகள் இல்லை ஆனால்
மழைபொழிந்து அவர்வீரம் வாழ்த்தும் மேகம்.

தாகமது தமிழீழம் ஒன்றே என்னும்
தாரகத்து மந்திரமே மூச்சாய் ஆகும்.


- தயா ஜிப்ரான் -
<span style='font-size:16pt;line-height:100%'>(2000 ம் ஆண்டின் சமர்ப்பொழுதில் எழுதப்பட்டது)</span>
.
.!!
Reply


Messages In This Thread
கண்ணீரில் நீந்துமெங்கள் தேசம் கழுவி - by Thaya Jibbrahn - 02-22-2005, 12:53 AM
[No subject] - by kavithan - 02-22-2005, 01:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)