08-24-2003, 07:43 AM
அன்பான பதிலுக்கு நன்றி திரு.அஜீவன்
உண்மைதான் எனது பிரச்சினை எனக்கு மட்டும்தான்.
நன்றி தங்கள் விளக்கத்துடனான பதிலிற்கு
தாய்க்கும் தாரத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்...........ஒப்பிட்டுத்தான் பார்க்கவேண்டும். காலம் இருக்கின்றது.
சரி இன்னுமொரு விடயம்
மலையாள சினிமாவிலும் நல்ல தரமான நடைமுறைவாழ்வுடன் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் எந்தவித மிகைப்படுத்தலோ எந்தவித சினிமாத்தனமோ காணப்படவில்லை. ஆனால் அதே திரைப்படம் தமிழில் வெளிவருமானால் அங்கு வியாபார நோக்கத்தை கருத்தில் வைத்து கற்பனைகளை விரிவாக்கி சிதைத்து விடுகின்றார்கள்.
உண்மையில் இன்றுவரை நான் எத்தனையோ திரைப்படங்கள் பார்த்துவிட்டேன் ( உங்களது தயாரிப்பில் வெளியான குறும்படங்கள் பார்க்க கிடைக்கவில்லை. எனவே அவற்றை விலக்கி) இன்றுவரை எனக்குள் மீண்டுமொரு தடவை பார்க்க கிடைக்குமா என்ற ஏக்கத்தை விளைவிக்கும் படம் எம்மவர்களால் தயாரிக்கப்பட்ட "காற்றுக்கென்ன வேலி "படம்தான். அதேபோல் ராதிகா விக்ரம் நடிப்பில் வெளியான "சிறகுகள்" என்ற படம். இது முழுக்க முழுக்க வெளிநாட்டில் தயாரான படம். இன்றுவரை மறக்கமுடியவில்லை. அவை யதார்த்தத்துடன் சம்பந்தப்பட்டவை.
அறிந்து சினிமா பார்க்க புறப்பட்ட நாளில் என்னால் வெறுத்து ஒதுக்கிய ஒரு திரைப்படம். பாலச்சந்தர் தயாரிப்பில் பிரகாஸ்ராஜ் சுருதி நடித்து வெளியான "கல்கி" திரைப்படம். அதன் தாக்கம் இன்னும் மனதைவிட்டகலவில்லை. அதன் பின்பு பாலச்சந்தர் படங்கள் மீது ஒரு நம்பிக்கையின்மை.

[b] ?