02-20-2005, 11:52 PM
கௌசல்யன் கொலையின் பின்னணியில் செயற்பட்டு வரும் மறை கரங்கள்
திங்கட்கிழமை21 பெப்ரவரி 2005 நன்றி தினக்குரல்
வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் பணிகளை முடக்கும் அதேநேரம் கிழக்கின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. புலிகள் மீதான தாக்குதல்களும் அதன் பின்னான பிரசாரங்களும் இவ்வாறானதொரு சூழ்நிலையை தோற்றுவிக்க முயல்கின்றன. போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு இவ்வாரத்துடன் மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இந்தப் போர்நிறுத்தத்தால் நாட்டில் போர் நின்றதே தவிர என்ன நோக்கத்திற்காக இந்தப் போர்நிறுத்தப்பட்டதோ அதில் எள்ளளவு பயனும் எட்டப்படவில்லை. அதேநேரம் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கையில் புலிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கௌசல்யனின் படுகொலையானது புலிகளை கடும் போக்கிற்கிட்டுச் செல்லும் சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது. கிழக்கின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கும் விதத்தில் ஆரம்பத்தில் சிறு சிறு தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் தற்போது கௌசல்யன் மீதான தாக்குதலானது கிழக்கைத் தொடர்ந்தும் குழப்பத்தில் வைத்து அங்கு ஸ்திரமற்றதொரு நிலையை ஏற்படுத்தி வடக்கு - கிழக்கை பிரிக்கும் முயற்சியை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்வதே அரசினதும் படையினரதும் நோக்கமாயுள்ளது.

திங்கட்கிழமை 21 பெப்ரவரி 2005 நன்றி தினக்குரல்
வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் பணிகளை முடக்கும் அதேநேரம் கிழக்கின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. புலிகள் மீதான தாக்குதல்களும் அதன் பின்னான பிரசாரங்களும் இவ்வாறானதொரு சூழ்நிலையை தோற்றுவிக்க முயல்கின்றன. போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு இவ்வாரத்துடன் மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இந்தப் போர்நிறுத்தத்தால் நாட்டில் போர் நின்றதே தவிர என்ன நோக்கத்திற்காக இந்தப் போர்நிறுத்தப்பட்டதோ அதில் எள்ளளவு பயனும் எட்டப்படவில்லை. அதேநேரம் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கையில் புலிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கௌசல்யனின் படுகொலையானது புலிகளை கடும் போக்கிற்கிட்டுச் செல்லும் சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது. கிழக்கின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கும் விதத்தில் ஆரம்பத்தில் சிறு சிறு தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் தற்போது கௌசல்யன் மீதான தாக்குதலானது கிழக்கைத் தொடர்ந்தும் குழப்பத்தில் வைத்து அங்கு ஸ்திரமற்றதொரு நிலையை ஏற்படுத்தி வடக்கு - கிழக்கை பிரிக்கும் முயற்சியை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்வதே அரசினதும் படையினரதும் நோக்கமாயுள்ளது. அதேநேரம் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் முயற்சியிலும் அரசும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபட்டுமுள்ளனர். கௌசல்யனின் கொலையின் மூலம் கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை அப்புறப்படுத்தும் முயற்சியை கருணா குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளதாக அரச ஊடகங்களும் சிங்கள ஆங்கில ஊடகங்களும் தினமும் பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
கிழக்கில் நிழல் யுத்தத்திலும் உளவியல் போரிலும் ஈடுபடும் இராணுவ புலனாய்வுப் பிரிவு அவ்வப்போது புலிகளின் மீதான தாக்குதல்கள் மூலம் நேரடி யுத்தத்திலும் ஈடுபடுகிறது. கருணா குழுவின் பெயரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அனைத்துமே இராணுவ புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்படுவதாக விடுதலைப்புலிகள் நேரடியாகவே குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் அதனை மறுக்கும் போதெல்லாம் அந்தத் தாக்குதல்களில் தங்களுக்கிருக்கும் தொடர்பை தெரியாமலே ஏதோவொரு வகையில் அவர்கள் காண்பித்துவிடுகின்றனர்.
புலிகளின் முக்கியஸ்தர்கள் மீதான தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் அதேநேரம் அந்தத் தாக்குதலுக்கு முன்னர் புலிகளுக்கு எதிரான ஆங்கில இணையத் தளமொன்றில் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்களும் வெளியாகிவிடும். கௌசல்யன் மீதான தாக்குதல் நடைபெற்ற அன்றைய தினம் கூட தாக்குதல் நடைபெறுவதற்க பலமணி நேரத்திற்கு முன்னர் அந்த ஆங்கில இணையத்தளத்தில் ஒரு விமர்சனச் செய்தி வெளியாகியிருந்தது.
கருணாவின் சகோதரர்களை புலிகள் இலக்கு வைத்துள்ளதால் அவர்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் கருணா மற்றும் அவரது சகோதரர் ரெஜி (கொல்லப்பட்டுவிட்டார்) ஆகியோரை புலிகள் அமைப்பிலிருந்து விலகுமாறு குடும்பத்தவர்களே வற்புறுத்தியிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி அந்த இணையத் தளத்தில் வெளியான அன்றைய தினமே வெலிக்கந்தை பகுதியில் வைத்து கௌசல்யன் கொலை செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தக் கொலையை கருணா குழுவே செய்தது என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்பதே அந்த இணையத் தளத்தின் நோக்கமாகும்.
இந்த ஆங்கில இணையத் தளம்தான் ஆரம்பம் முதல் கருணா தொடர்பான செய்திகளை பிரத்தியேகமாக வெளியிட்டு வருகிறது. கருணா ஹதமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற கட்சியை ஆரம்பித்துவிட்டதாக முதலில் செய்தியை வெளியிட்ட இந்த இணையத் தளம் பின்னர் ஹஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி'யுடன் (ஈ.என்.டி.எல்.எவ்.) இணைந்து கருணா தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
அத்துடன் கௌசல்யன் கொலைக்கு இந்த தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணியின் துணைப் படையான தமிழ் தேசியப் படை (Tamil National Force - TNF) உரிமை கோருவதாகவும் கொலை நடைபெற்று மூன்றாவது நாள் இந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டது. எனினும் அந்தச் செய்தியில் விஷேட அம்சமொன்றிருந்தது.
அதாவது கௌசல்யனின் கொலையை தாங்கள் தான் செய்தோம் என்பதைக் கூறுவதை விட இக் கொலையை இராணுவம் செய்யவில்லை என்பதை நியாயப்படுத்துவதிலேயே இந்தச் செய்தி தீவிரம் காட்டியிருந்தது. இந்தப் படையின் அதிகாரபூர்வ பேச்சாளரான சேரன் என்பவரது பெயரிலேயே அந்த இணையத்தளம் கௌசல்யனின் கொலைக்கு உரிமை கோரும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.
அதேநேரம் கௌசல்யனைக் கொல்ல வேண்டிய தேவை இராணுவத்திற்கு ஏனுள்ளது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள அந்த அறிக்கை கௌசல்யனை இராணுவம் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் அவரை விட புலிகளின் மிக முக்கிய தலைவர்களான தமிழ்ச்செல்வன் அன்ரன் பாலசிங்கம் மற்றும் தளபதிகளான பானு சொர்ணம் சூசை போன்றோர் விமானப் படை ஹெலிகொப்டர்களில் சென்று வரும் போது ஹசாம் -7' ரக ஏவுகணை மூலம் இவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் கொன்றுவிடலாமே எனவும் கூற முனைகிறது.
அத்துடன் கௌசல்யன் மீதான தாக்குதலை நடத்தியவர்களில் இருவரது பெயரையும் குறிப்பிட்டு அவர்களே இத் தாக்குதலின் பொறுப்பாளிகளெனவும் ஹரி.என்.எவ்.' பின் பேச்சாளர் சேரன் கூறுவதாக அந்த இணையத் தளம் கூறியுள்ளது.
ஒரு புறம் கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இராணுவம் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகையில் மறுபுறம் இந்தத் தாக்குதலுக்கும் படையினருக்கும் எதுவித தொடர்புமில்லையென்றும் தாங்களே இதனை மேற்கொண்டதாக தமிழ் தேசியப் படை உரிமை கோர முற்படுவதன் பின்னணி குறித்து சாதாரண மக்களே தெளிவு பெற்றிருப்பார்கள்.
கிழக்கில் தங்கள் மீது இராணுவ புலனாய்வுப் பிரிவே தாக்குதல்களை நடத்துவதாகவும் கருணா குழுவென்று ஒன்றில்லையெனவும் புலிகள் திரும்பத் திரும்ப கூறிவருகையில் கருணா குழுவும் ஈ.என்.டி.எல்.எவ்.வும் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசியப் படையே இத்தாக்குதல்களை நடத்துவதாகவும் படையினருக்கும் இவற்றுக்கும் எதுவித தொடர்புமில்லையெனக் கூறமுற்படுவதில் அரச ஊடகங்களும் சிங்கள ஆங்கில ஊடகங்களும் போட்டி போட்டு வருகின்றன.
அத்துடன் இந்தத் தமிழ் தேசியப் படை குறித்து மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் இந்தப் படை வெலிக்கந்தை தாக்குதலின் பின்னர் உஷாராகச் செயற்படுவதாகக் காண்பிக்க வேண்டுமென்பதற்காகவும் மேற்படி ஆங்கில இணையத்தளம் கடந்த வாரம் மற்றொரு செய்தியை தமிழ்த் தேசியப் படை என்ற பெயரில் வெளியிட்டது.
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பிரபாகரனின் கைப்பொம்மைகளாகச் செயற்படுவதால் கூட்டமைப்பு எம்.பி.க்கள் 22 பேரும் உடனடியாக இராஜிநாமாச் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியப் படை கோருவதாகக் கூறி அதற்கான காரணங்களையும் அந்தச் செய்தி தெரிவித்திருந்தது.
கௌசல்யனையும் முன்னாள் எம்.பி. சந்திரநேருவையும் இராணுவத்தினர் கொல்லவில்லையெனவும் கருணா குழு அல்லது தமிழ்த் தேசியப் படையே அவர்களைக் கொன்றதாகச் சித்திரிக்கவும் அந்தப் படையே தற்போது கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கும் மிரட்டல்களை விடுக்கத் தொடங்கி விட்டதாகவும் காண்பிக்கும் முயற்சியே இதுவெனக் கருதப்படுகிறது.
இதேநேரம் இந்த இணையத்தள செய்தியை அரச ஊடகங்களும் சிங்கள ஆங்கில ஊடகங்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. அத்துடன் அரச தொலைக்காட்சி ஒருபடி மேலே சென்று கூட்டமைப்பு எம்.பி.க்களின் பாதுகாப்பிற்கு தமிழ்த் தேசியப் படையால் ஹபெரும் அச்சுறுத்தல்' ஏற்பட்டுள்ளதால் அவர்களது பாதுகாப்பு குறித்து அரசு என்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளதென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயாரத்னவை பேட்டி கண்டு ஒளிபரப்பியது.
இந்த ஆங்கில இணையத்தளம் புலிகள் மீதான தாக்குதல்களுக்குப் படையினர் பொறுப்பல்ல என்றும் தமிழ்த் தேசியப் படையே காரணமெனவும் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வருகையில் தங்களுக்கும் இந்தக் கொலைகளுக்கும் தொடர்பேதுமில்லையென்றும் கருணா குழுவே இதனைச் செய்ததாகவும் காண்பிக்கும் முயற்சியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இவ்விடத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் செய்திகள் வேறுவிதமாகவுள்ளன. அதாவது கௌசல்யன் மீதான தாக்குதலை கருணா குழுவே மேற்கொண்டதை புலிகளும் நன்கறிவரெனவும் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் கருணா குழுவின் நடமாட்டமிருப்பதை அறிந்த புலிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைவதால் வெலிக்கந்தை பகுதியில் புலிகளுக்கும் கருணா குழுவிற்கும் இடையே மோதல்கள் வெடிக்கலாமென சிங்கள ஆங்கில ஊடகங்களூடாக பிரசாரம் செய்து வருகிறது.
இராணுவ புலனாய்வுப் பிரிவின் இவ்வாறான பிரசாரச் செய்திகளை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் வானொலி குறிப்பாக ஈ.பி.டி.பி.யால் நடத்தப்படும் இதயவீணை நிகழ்ச்சி மட்டுமே ஒலிபரப்புகிறது. ஏனைய தமிழ் ஊடகங்கள் இந்தப் பிரசாரத்திற்கு எடுபடுவதில்லை.
இதேநேரம் கௌசல்யனின் கொலைக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவே காரணமெனவும் கருணா குழுவென்று ஒன்றில்லையெனவும் கிழக்கில் குழப்பங்களை ஏற்படுத்த படையினரே இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதாக புலிகள் கூறுவதையும் தற்போது சிங்கள மக்கள் நம்புவதால் அவர்களை திசை திருப்பும் வகையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அரச மற்றும் சிங்கள ஊடகங்களூடாக பொய்ப் பிரசாரத்திலீடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கௌசல்யனின் கொலையை அடுத்து வெலிக்கந்தை பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடும் புலிகள் வெலிக்கந்தை இராணுவ முகாமிற்குள் கருணா குழுவினர் மறைந்திருப்பதாகக் கூறி அந்த முகாமை திடீரென சுற்றி வளைக்கத் திட்டமிட்டு வருவதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் கூறுவதாக கடந்த வாரம் சிங்கள ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன.
இதன் மூலம் கௌசல்யன் மீதான தாக்குதலுக்கு கருணா குழுவே காரணமெனப் புலிகள் உறுதியாக நம்புவது போன்றதொரு தோற்றப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் காண்பிக்க இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதேநேரம்கௌசல்யனின் கொலை புலிகளை கடும் சீற்றமடையச் செய்துள்ளது. தமிழ் மக்கள் கூட இந்த விடயத்தில் புலிகள் பொறுமையாக இருப்பது குறித்து விசனமடையுமளவிற்கு நிலைமையுள்ளதால் இதற்கான பதில் விரைவில் கிடைக்குமென அரசும் படைத் தரப்பும் கூட எதிர்பார்த்திருக்கின்றன.
http://www.nitharsanam.com/?art=8929

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>