Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகர்-நடிகைகளுடன் மரத்தன் ஓட்டம்
#1
சென்னையில் மராத்தான் ஓட்டம் நடிகர்-நடிகைகளுடன் 10ஆயிரம் பேர் ஓடினர்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/20/flash/C1107_run.jpg' border='0' alt='user posted image'>


சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியவர்களை படத்தில் காணலாம்.
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/20/flash/C1107_run.jpg' border='0' alt='user posted image'>


சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் முன்னணி வீரர்கள் பங்கு கொண்ட காட்சி.

சென்னை பிப் 20- சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் சினிமா,தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் உள்பட 10ஆயிரம் பேர் பங்கேற்று ஓடினர்.

சென்னை ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு விளையாட்டு ஆணையமும் இணைந்து ஆண்டுதோறும் சென்னையில் மராத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மராத்தான் போட்டிகள் சுனாமி நிதி திரட்டுவதற்காக இன்று காலை சென்னை கடற்கரை சாலையில் நடத்தப்பட்டது.

இதில் ஆண்களுக்கான முழு மராத்தான் போட்டிகள் 42 கிலோ மீட்டர் தூரமும். பெண்களுக்கான முழு மராத்தான் போட்டிகள் 21 கிலோ மீட்டர் தூரமும் கொண்டதாகும்.

இன்று காலை 6.30 மணிக்கு இந்த போட்டிகளை மாநகர போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜ; கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்களுக்கான முழு மராத்தான் போட்டியில் கென்யா வீரர்கள் சாமுவேல் கில்ட் கண்டா, லுகாகில் மொய் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கான 10 கிலோ மீட்டர் தூர ஒட்டப்பந்தயம், முதியவர்களுக்கான 5 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயம் என 11 வகையான போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

போட்டிகள் சென்னை கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து லைட்ஹவுஸ், அடையாறு, பெசண்ட் நகர் வழியாக எலியட்ஸ் கடற்கரை அடைந்து பின்னர் அங்கிருந்து மீண்டும் உழைப்பாளர் சிலைக்கு திரும்பியது. இந்த போட்டியில் சென்னை பள்ளி, கல்லுரி மாணவர்கள், விளையாட்டு வீரர்களுடன் பாகிஸ்தான், இஸ்ரேல், தாய்லாந்து, நாட்டை சேர்ந்த மராத்தான் வீரர்களும் கலந்து கொண்டு ஓடினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர மராத்தான் போட்டியில் நடிகர்கள் ஜீவா, ரமேஷ்கண்ணா, மன்சூரலிகான், விஜய் ஆதிராஜ;, கிருஷ்ணன், பிரேம்குமார், நடிகைகள் பூஜா, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் மாடல் அழகிகள், பிரபல விளையாட்டு வீரர்கள் கலந்து ஓடினார்கள்;. இதனை சிவாஜி புரொடக்ஷன் அதிபர் ராம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடிகர் மாதவன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அவர் நட்சத்திர ஓட்டப்பந்தயம் தொடங்குவதற்கு முன்பு புறப்பட்டுச் சென்றார். இவர்கள் தவிர பல முன்னணி நடிகர்- நடிகைள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் பங்கேற்கவில்லை.

மராத்தான் போட்டியில் கலந்து கொள்ளவும் அதனை வேடிக்கை பார்க்கவும் இன்று அதிகாலை முதலே கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இரு பக்கமும் திரண்டு இருந்தார்கள். உடல் ஊனமுற்ற மாணவர்களும். மனநலம் குன்றிய இல்லத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடன் மராத்தான் போட்டியை கண்டு ரசித்ததோடு கலந்து கொண்ட வீரர் வீராங்கணைகளை கைதட்டியும், குரல் எழுப்பியும் உற்சாகப்படுத்தினார்கள். இது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தொப்பி, குளிர்பானம், தண்ணீர் பாக்கெட், மோர் போன்றவற்றை இலவசமாக வழங்கின.

போட்டி நடப்பதற்கு ஏதுவாக இன்று காலை 6 மணிமுதல் 11 மணிவரை கடற்கரை சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கடற்கரை சாலை வாகனங்கள் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர். மந்தைவெளி வழியாக திருப்பி விடப்பட்டன. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் பெஞ்சமின் செரியன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பொதுமேலாளர் எஸ்.வரதராஜன், தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி கழக தலைவர் டேவிதார். ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆர்.கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் பெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றவருக்கு 2.10 லட்சம். பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவருக்கு 1.05 லட்சம் உள்பட 10 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியின் மூலம் திரட்டப்பட்ட தொகை சுனாமி நிவாரண நிதிக்காக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Dinakaran
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நடிகர்-நடிகைகளுடன் மரத்தன் ஓட்டம் - by Vaanampaadi - 02-20-2005, 10:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)