08-23-2003, 05:07 PM
Mathivathanan Wrote:[quote=Mathivathanan]
ஆனால் நாம் வெளி நாடுகளுக்கு வந்து எத்தனை மொழிகளைக் கற்றுவிட்டோம். யோசித்தால் நம்பவே முடியாதது. ஆனால் உண்மை. மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம்.
நன்றி அஜீவன் ஒரு விடயத்தை மட்டும் தொட்டிருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள தொடர்பை.. குறிப்பாக கேரளாவுக்கும் தமிழுக்கும் உள்ள தெடர்புபற்றி எழுதியபோது \"றோ\" என்ற பட்டமும் கிடைத்த து}ற்றல்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.. அதை விடுவோம்.. 87 ஆண்டுவரை அரவணைத்து அப்பன் அம்மா மாமன் மாமி எனக் கொண்டாடியவர்கள் ஏன் தற்போது து}ற்றுகிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.. ஒருமொழி படிப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்தவர்கள் பலமொழி படிப்பதை பாராட்டி சந்தர்ப்பவாதிகளாக செயற்படுவதையும் உங்களுக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.. அதையும் விடுவோம்.. போத்துகேயர் மாத்திரமல்ல ஒல்லாந்தர் ஆங்கிலேயரிடமிருந்தும் பலவற்றை எடுத்தும் கொடுத்தும் உள்ளோம்.. அதனால் எடுத்த சொற்களை தமிழல்ல என நீக்கியவுடன் சரித்திரம் அழிந்துவிடுமா..? புதிய சரித்திரம் எழுதுவதனால் பழைய சரித்திரம் மறைந்துவிடுமா..? நமது ஆதிகால வரலாறுப் புத்தகங்கள் பலவும் பலஇடங்களில் இருக்கின்றன.. அவை எப்போதும் உண்மை வரலாறு என்று வந்து பறைசாற்றிக்கொண்டிருக்கும்.. இந்தியத் தமிழருக்கு ஒருபாடமாக அமையும் என்பது எனது நம்பிக்கை.. நன்றி வணக்கம்.
அன்பின் மதிவதனனுக்கு
உங்கள் ஆதங்கத்தையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பல சமங்களில் பலருக்கு உண்மைகள் புரிவதுமில்லை, ஜீரணமாவதுமில்லை. அத்தோடு அவர்கள் தெளிவு பெற்றுக் கொள்ள முயல்வதுமில்லை. இதனால்தான் நாமும் , நமது சமுதாயமும் தொடர்ந்தும் பின் தங்கிவிடுகிறோம். சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத போது கோபப் படுகிறோம். அல்லது கேள்வி கேட்டவனையே எதிரியாகப் பார்க்கிறோம். இது நமது இயலாமையே தவிர , விவேகமல்ல.
இது காலம் காலமாக உலக வரலாற்றில் நடந்து வரும் ஒரு சோக நிகழ்வு.
கலிலேயோ உலகம் உருண்டை என்று சொன்ன போதும், சாக்கிரடீஸ் இளைஞர்களுக்கு பகுத்தறிவை ஊட்டிய போதும். . . . .
(இப்படி எத்தனை மேதைகள்????????. . . . . ) அவர்களுக்கு கிடைத்த பட்டம் , பரிசு என்ன?
பைத்தியக்காரன் என்பதும், மரண தண்டனையும்தான். . . . . . .
எனவே உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்தும் களத்தில் பவனி வர வேண்டும். அதுவே என் எதிர்பார்ப்பு, வேண்டுகோள். . . . . அரசியலை சினிமாவுக்குள் புகுத்துவது என் எண்ணமல்ல. . . . . . நான் கலைஞனாகவே வாழ ஆசைப்படுகிறேன். 1983 க்கு பிறகு வாழ்ந்த நாட்டை விட்டு வந்து . . . . . . நன்றாக அனுபவப்பட்டவன். . . . . . . . . . .
தாய் மண்ணின் கனவை மட்டும் மௌனமாக சுமப்பவன். . . . .
தாய்க்கு மட்டும்தான் பிரசவ வேதனை சரியாகத் தெரியும். பிரசவத்தை பார்த்து விட்டு பிரசவ வேதனை பற்றி சொல்பவர்கள், கூப்பாடு போடுபவர்கள், போலி சாமியார்களுக்கு சமம்.
ஊரில் இருக்கும் போது இல்லாத ஒரு உணர்வு நாடு விட்டு நாடு வந்த பிறகு பலருக்கு ஏற்பட்டு விடுகிறது. அது அங்கே தன் கடமையை செய்யாமல் விட்டு வந்த அவர்களது குற்ற உணர்வுகளின் தாக்கம்.
இதற்காக தெரியாததையும் , தேவையற்றவற்றையும் உளரக் கூடாது. அது மாபெரும் ஆபத்து.
மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே ஒரே ஒரு வேறுபாடுதான் இருக்கிறது.
மனிதனுக்கும் பசியெக்கும் : மிருகத்துக்கும் பசியெக்கும்,
மனிதனுக்கும் தாகமெடுக்கும் : மிருகத்துக்கும் தாகமெடுக்கும்,
மனிதனுக்கும் தூக்கம் வரும் : மிருகத்துக்கும் தூக்கம் வரும்,
மனிதனுக்கும் வேதனையை உணரலாம் : மிருகத்துக்கும் வேதனையை உணரலாம்,
மனிதனுக்கும் அன்பு செய்ய முடியும் : மிருகத்துக்கும் அன்பு செய்ய முடியும்.
ஆனால் மிருகத்தால் ஒரு விடயத்தை தீர்மானிக்க, முடிவை எடுக்க, முடியாது.
மனிதனால் மட்டுமே ஒரு விடயத்தை நல்லதா? கெட்டதா?,
நம்மால் இதை செய்ய முடியுமா? முடியாதா? என்ற முடிவை எடுக்கக் கூடிய சக்தியும் அறிவும் உண்டு.
அப்படியில்லதோர் . . . . . . அவர்களாகவே முடிவெடுக்கட்டும். . .
உங்கள்,
அஜீவன்

