Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை அமைதி பேச்சுக்கு உதவ தயார்: அமிர்தானந்தமயி
#1
பிப்ரவரி 20, 2005

இலங்கை அமைதி பேச்சுக்கு உதவ தயார்: அமிர்தானந்தமயி
<img src='http://www.amma-mass.org/images/ammaMain5.gif' border='0' alt='user posted image'>

திருவனந்தபுரம்:

இலங்கை மக்கள் கேட்டுக்கொண்டால் அந் நாட்டு அமைதி பேச்சுவார்தையை மீண்டும் தொடங்கி வைக்கத் தயாராக இருப்பதாக மாதா அமிர்தானந்தமயி தெரிவித்துள்ளார்.


சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மாதா அமிர்தானந்தமயி இலங்கை சென்றார். அங்கு நிவாரணப் பணிகளை பார்வையிட்டுவிட்டு, இந்தியா திரும்பினார்.

தனது பயணம் குறித்து நிருபர்களிடம் கூறுகையில்,

இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் 300 வீடுகள் கட்டித் தருவோம். இலங்கை பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை சந்தித்தேன். கம்பன்டோடா பகுதி சுனாமி நிவாரண முகாமை பிரதமரோடு சென்று பார்வையிட்டேன்.

தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டேன். இலங்கையின் உள்நாட்டு சண்டையை தமிழ் மக்கள் உண்மையாகவே வெறுக்கின்றனர். அமைதியை விரும்புகின்றனர்.

இலங்கையின் அமைதிப் பேச்சுவார்த்தை அந்நாட்டின் உள் விவகாரம். ஆனால், அந்நாட்டு மக்கள் கேட்டுக் கொண்டால் தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி வைக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இலங்கை அமைதி பேச்சுக்கு உதவ தயார்: அமிர்தானந்தமயி - by Vaanampaadi - 02-20-2005, 12:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)