Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பயணங்கள் முடிவதில்லை...!
#1
இந்த
"பாலைவனச் சோலையிலே"
"நினைவெல்லாம்" "நீயா"க வந்தாய்
"இதயத்தைத் திருடாதே" எனச்
"சொல்லாமலே" இருந்து விட்டேன்
"திருடா திருடா" எனச் சொல்லியே
மனதைத் திருடி விட்டாய்
"மெல்லத் திறந்த கதவாக"
என் "உள்ளம்" திறந்து கொண்டேன்
"முகம்" தெரியாதவளிடம் - என்
"முகவரி" தொலைத்தேன்

"கேளடி கண்மணி" - இந்தப்
"பொன்மணி" "நெஞ்சினிலே"
"நினைவே ஒரு சங்கீதமாய்"
"இளமை ஊஞ்சல் ஆடுவது"
நீயடி பெண்ணே!

ஆனால்...
"காலமெல்லாம் காதல் வாழ்க" என
கோசம் மட்டுமே போடலாம்
"இருவர்" "உள்ளம்" ஒன்றானாலும்
"பறவைகள் பலவிதம்" அதில் நாம்
"பாதை மாறும் பறவைகள்"!

"ப்ரியமானவளே!"
உனை
"பிரியாத வரம் வேண்டும்" என
"ஆசை" கொண்டேன் - ஆனால்
"மின்சாரக் கனவாக"ப் போனதடி

"ஈரமான ரோஐாவே!"
"உன்னிடத்தில்" என்னைக் கொடுத்தேன்
உனக்காக என்றென்றும்
"மெளன ராகமாய்" என் "இதயம்"
"இதயகீதம்" வடிக்கும்
"களவும் கற்று மற" எனச் சொன்னார்கள்
"காத(ல்)"லும் அங்கு அடங்குமோ என்னவோ?

இனியவளே!
"புதுவசந்தம்" வராவிடினும்
என் "இதய"த்தில் நீ
"காதலுக்கு மரியாதை" கொள்ளும் என் காதலுக்கு
என்றென்றும்
<b>"பயணங்கள் முடிவதில்லை..." </b>


(ரொம்ப சினிமா பார்க்கிறதால ஏற்பட்ட குழப்பம், மற்றும்படி ஒண்டுமில்லை <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )
:: ::

-
!
Reply


Messages In This Thread
பயணங்கள் முடிவதில்லை...! - by Kurumpan - 02-19-2005, 04:44 AM
[No subject] - by வியாசன் - 02-19-2005, 07:41 AM
[No subject] - by KULAKADDAN - 02-19-2005, 11:23 AM
[No subject] - by Kurumpan - 02-19-2005, 01:57 PM
[No subject] - by Kurumpan - 02-19-2005, 01:58 PM
[No subject] - by kuruvikal - 02-19-2005, 02:28 PM
[No subject] - by KULAKADDAN - 02-19-2005, 03:21 PM
[No subject] - by tamilini - 02-19-2005, 04:00 PM
[No subject] - by shanmuhi - 02-19-2005, 11:43 PM
[No subject] - by Mathuran - 02-20-2005, 12:27 AM
[No subject] - by Kurumpan - 02-20-2005, 02:58 AM
[No subject] - by kavithan - 02-20-2005, 06:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)