02-18-2005, 11:27 PM
தர்மா,
யாழ் களம் இவ்வாறான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஆர்வமுள்ளவர்கள் குறிப்பிடத்தக்களவில் பங்குபற்றும் இடமாக தெரியவில்லை. மேலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இதை எடுத்துக்காட்டுகின்றன.
இந்திய இராணுவம் இலங்கை வந்ததுடன் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று வடக்கு கிழக்கில் ஐ.நா.வின் பல்வேறு பிரிவுகளும் தமது அலுவலகங்களை திறந்திருப்பது ஆகும். ICRC யும் கூட இந்த காலப்பகுதியிலேயே வந்தது. இந்திய இராணுவத்தின் வருகை, இலங்கையின் போரை சர்வதேச பிரச்சினையாக மாற்றியது. ஆகவே சிறி லங்கா ஐ.நா.வின் வருகையை தடை செய்ய முடியவில்லை.
2002 ம் ஆண்டளவில் ஐ.நா., அமெரிக்கா உட்பட பல நாடுகளை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே போர்க்களத்துக்கு அனுப்ப சட்டரீதியாக ஒப்புக்கொள்ள வைத்தது. ஆயினும் அமெரிக்கா 18 வயதுக்கு குறைந்தவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் சட்டத்தை நடைமுறைக்கு வராமல் தடுத்து விட்டது. இதற்கு காரணம் அவர்கள் 17 வயதில் பெற்றோரின் சம்மதத்துடன் இளைஞர்களை படையில் சேர்ப்பதாகும்.
இந்த நிலையில் நாடுகளை சாராத படையணிகளை ஐ.நா. இதே விதிமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த சட்டவிதிகளை தாமாகவே முன்வந்து பின்பற்ற போவதாக ஐ.நா.வுக்கு ஒரு பகிரங்க வாக்குறுதியை வழங்கினர்.
UNICEF சிறுவர்களின் நலன்களில் மட்டுமே அக்கறை கொண்ட அமைப்பு. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படைகளில் சேர்க்கப்படுவதை அவதானிப்பதும் இந்த அமைப்பின் பணிகளில் ஒன்று. குறிப்பாக 18 வயதுக்கு குறைவானவர்களை படையில் சேர்க்க மாட்டோம் என்று வாக்குறுதியளித்த நாடுகளையும் (சட்டம் அமெரிக்காவில் தடுக்கப்பட்டு இன்னும் நிறைவேறவில்லை), நாடுகளில்லாத இராணுவங்களையும் கண்காணித்து ஐ.நா.வுக்கு அறிக்கை வழங்குவது. இதோடு அந்த அறிக்கைகள் குறித்து செய்தியாளருக்கும் அறிவிக்கும். சிறிலங்கா அரசின் பிரச்சார சாதனங்கள் இந்த அறிக்கைகளை தமது பிரச்சாரத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றன.
UNICEF ன் அறிக்கையில் உள்ள தவறான தகவல்கள் பற்றியும் சரியான நிலைப்பாடு பற்றியும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு விடுதலைப்புலிகள் அறிக்கை அனுப்பியிருப்பதாக தமிழ்ச்செல்வன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஐ.நா.வை தமது பிரதேசத்துக்கு வந்து சுதந்திரமாக விசாரணை செய்து பார்க்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இயல்பாகவே ஐ.நா. தமது நிறுவனமான UNICEF ன் அறிக்கையில் கூடுதலான நம்பிக்கை வைத்திருக்கும். ஆயினும் தமிழ்ச்செல்வனின் கோரிக்கையை வெறுமனே தட்டிக்கழிக்கவும் முடியாது. UNICEF ன் தொழில் அறிக்கை விடுவது அல்ல. மாறாக சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுவது உண்மையாக இருந்தால் அதை கைவிடுமாறு விடுதலைப்புலிகளை சம்மதிக்க வைப்பதுவே அவர்களது முக்கியமான கடமையாகும்.
விடுதலைப்புலிகளுடன் தமது உறவை முறித்துக்கொண்டு, செயலாளர் நாயகம் வரை பிரச்சினை போன நிலை, இலங்கையில் உள்ள UNICEF உயரதிகாரிகளுக்கு தனிப்பட்ட தொழில்திறனில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படும். இவர்களது பதவியுயர்வுகள் சம்பளஅதிகரிப்பு என்பன பாதிக்கப்படும். இவர்கள் இடமாற்றம் செய்யப்படவும் கூடும்.