Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வழுக்கைக்கு மருந்து
#1
வழுக்கைக்கு மருந்து
<img src='http://www.jayatvnews.org/news-photos/China-Barding1-web.jpg' border='0' alt='user posted image'>

முடி கொட்டி, தலை வழுக்கையானால், யாருக்குத்தான் வருத்தம் இருக்காது. தற்போது சீன மக்களுக்கும் இதுதான் தலையாய பிரச்னை. இங்கு, 25 முதல் 35 வயது கொண்டவர்களில் 40 சதவீதம் பேருக்கு தலை வழுக்கையாகி விடுகிறதாம்.

முடி கொட்டுவதைத் தடுக்கவும், தலை வழுக்கையாகாமல் பாதுகாக்கவும் எத்தனையோ மருத்துவங்களை பார்த்து விட்ட சீன மக்களுக்கு, பிரச்னை தீர்ந்தபாடில்லை. இப்போது, இதற்குத் தீர்வாக, முடியை நட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சை கைகொடுத்து வருகிறது. வழுக்கைத் தலையில் நவீன கருவிகளின் உதவியுடன் முடியை நட்டு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனைகளும் இங்கு ஏராளமாக பெருகி வருகின்றன. இந்த அறுவை சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைப்பதால், இது தற்போது சீனாவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. முடியை நட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ள 17 ஆயிரம் ருபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Jaya news
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வழுக்கைக்கு மருந்து - by Vaanampaadi - 02-18-2005, 02:13 PM
[No subject] - by விது - 02-18-2005, 02:30 PM
[No subject] - by sinnappu - 02-18-2005, 07:13 PM
[No subject] - by kavithan - 02-19-2005, 12:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)