02-18-2005, 08:58 AM
மோகன் Wrote:Quote:குறும்பன் பழைய ஈழவன் இல்லைத்தானே?இல்லை.
நன்றி மோகன் அண்ணா.
ஈழவனைக் காணவில்லை என்று தேடும் உறவுகளுக்கு வந்தனம்.நான் யாழ் களத்தை விட்டு எங்கும் போய்விடவில்லை.இதுதான் தாய்க்களம் ஆனால் ஆரம்பித்த இடத்திலேயே தொடர்ந்தும் நின்றுகொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.தொடர்ந்தும் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு மனிதரூடு பயணித்துக்கொண்டிருப்பதுதான் என்க்குப் பிடித்தமானதும் பிரயோசனமானதும்.
யாழ் கள உறவுகளின் கருத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.கருத்துகள் எதையுமெ எழுதுவதில்லை அவ்வளவே.கருத்தொன்றை எழுதினால் கட்டாயம் மறுமொழிபவர்களுக்கு பதிலிறுக்கவேண்டும் அதற்கு நேரப்பற்றாக்குறை இடங்கொடுக்காது.சில மறுமொழிகளுக்குப் பதிலளிக்காது இருப்பதை விட விவாதங்களில் ஒதுங்கியிருத்தல் மேல் என்று படுகின்றது.
நன்பர்களே தொடர்ந்தும் கலக்குங்கள்.பெயர் மாற்றம் செய்து கொண்ட குறும்பனுக்கும் வாழ்த்துக்கள்
\" \"

