Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகள் மீது தடைவிதிக்க வேண்டாம்:
#1
விடுதலைப்புலிகள் மீது தடைவிதிக்க வேண்டாம்:
69 சதவீத கனடியர் தெரிவிப்பு
ஜ கனடிய நிருபர் ஸ ஜ வியாழக்கிழமைää 17 பெப்ரவரி 2005ää 14:57 ஈழம் ஸ
விடுதலைப்புலிகள் மீது கனடாவில் தடை விதிக்க வேண்டாம் என கனடிய தொலைக்காட்சி ஒன்று நடத்திய மக்கள் கணிப்பில் 69 சதவீத கனடிய மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஓம்னி தொலைக்காட்சி ஆங்கிலத்தில் 24 மணித்தியாலங்களாக நடத்திய தொலைபேசி கணிப்பிலேயே இது வெளிப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற சில கூக்குரல்கள் சமீப நாட்களாக கனடாவில் வெளிப்பட்டு வந்த நிலையிலேயே மக்களின் இக்கணிப்பும் வெளிவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கனடிய எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் விடுதலைப்புலிகளை தடைசெய்யுமாறு விடுத்த வேண்டுகோளை கனடிய வெளிவிவகார அமைச்சர் பியர் பெற்றிக்குறு அவர்கள் நிராகரித்தார்;.

அமெரிக்காää நோர்வே உட்பட பல நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் கனடாவில் மேற்கொண்டுää நிலைமையை சீர்கெட்டுப் போக அனுமதிக்க வேண்டாம் எனத் தம்மை கேட்டுள்ளதாகவும் அவர் அப்போது மேலும் தெரிவித்தார்.

'விடுதலைப்புலிகளையும் உள்வாங்கிää இயங்குவதன் மூலமே போர் நிறுத்தத்தை மேலும் வலுப்படுத்திää தொடர்ந்து பேணுவதற்கு உதவும் என நாம் திடமான நம்புகின்றோம். இந்த நேரத்தில் அவர்களை தடை செய்வதன் மூலம் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை என்பதையும் நாம் உண்மையாக உணர்கின்றோம்ää" எனக் கனடிய வெளிவிவகார அமைச்சர் பியர் பெற்றிக்குறு தனது அமைச்சக உபகுழு குழுநிலை விவாதத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்;.

2001 செப்டம்பரில் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின் கனடாவிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் இதுவரை 35 அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்களாக பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்தாலும்ää விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக கனடாவில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை 2002 இல் அமுலுக்கு வந்த கனடிய பயங்கரவாதச் சட்டத்தை அதன் அமுல் காலமான 3 வருடங்களுக்கு பின்னரும் அவ்வாறே தொடர்வது குறித்த மீளாய்வுகள் பல மட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.



புதினத்தில் சுடப்பட்டது நன்றி
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
விடுதலைப்புலிகள் மீது தடைவிதிக்க வேண்டாம்: - by வியாசன் - 02-17-2005, 07:40 PM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 07:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)