Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கம்பியுட்டர் பாபா
#1
நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்குமே தவிர சாமியார்ப் பஞ்சத்துக்கு சான்ஸே இல்லே. மழித்தவர், நீட்டியவர், சிலிர்த்தவர், ஜில்பா, குட்டித் தொப்பை, செல்லத்தொப்பை, பானைத் தொப்பை என்று பல size and shape களில் சாமியார்கள் நிறைந்த புண்ணிய பூமி நம்முடையது! இவர்களின் கியாதியைப் பற்றி டிவியில் தினந்தோரும் அவர்களின் பக்த கோடிகள் புராணங்களை அடுக்குகிறார்கள். கையை ஆட்டினால் விபூதி, கக்கினால் கிடைப்பது மோதிரம், லிங்கம் முதலிய வஸ்துக்கள். எல்லாம் "ஜாதுகர்" பார்ட்டிகள்! ரிமோட்டிலேயே ஆபரேஷனெல்லாம் கூட செய்து விடுகிறார்கள் இந்த confidence tricksters!

இவர்களெல்லாம் காலத்துக்கேற்றபடி மாறவேண்டும். எவ்வளவு நாட்கள்தான் கக்கிக் கொண்டிருப்பார்கள்! இந்த ஸைபர் யுகத்தில் தோன்றியுள்ள புதுவகைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டாமா?

நார்ட்டன், அவன் முப்பாட்டன் எல்லோருக்கும் பெப்பே என்று நம் கம்ப்யூட்டர்களுக்குத் தண்ணி காட்டும் வைரஸ் மற்றும் அவைகளின் ஒன்று விட்ட சகோதரி(!)களான trojan, worm, spyware, macros போன்ற ஸைபர் கிருமிகளை அழிக்க இந்த "மன்மத ராசா" சாமியார்கள் தங்கள் ஆன்மீக வலிமையைத் திருப்பி விட்டால் ஐ.டி உலகமே செவ்வாடை, பச்சை ஆடை, மஞ்சள் ஆடை பூண்டு (அல்லது ஆடையில்லாமல்) இவர்களுக்கு காவடி எடுக்கத் தயாராயிருப்பார்களே!

இந்த கம்பூட்டர் பாபாக்கள் "பூ.." என்று ஊதியோ, டான்ஸ் ஆடியோ, கொஞ்ச வயசுப் பாப்பாக்களுடன் வந்து கும்மி அடித்தோ, நான்தான் அம்மா, நான்தான் அம்மா பகவான் என்று டிவியில் போஸ் கொடுத்தோ அல்லது எதோனும் ஒரு வகையில் பஜனை(!) செய்தோ இந்த வைரஸ் அழிப்பு யாகம் தொடங்கலாம். வைரஸ்களுடன் சேர்த்து லைனக்ஸ் உட்பட்ட எல்லா திறந்த நிரல் மென்பொருட்களையும் அழிப்பதாக இருந்தால் இந்த வேள்வி அட்டகாசங்களின் முழுச் சிலவையும் தான் ஸ்பான்ஸோர் செய்வதாக "ரோக்கா கதவு"க்கார பெருங்கிழார் முன்வர வாய்ப்புள்ளது!

அனைத்து சாமியார்களுக்கும் இது ஒரு சவால்!

வலையிலிருந்து சுட்டது
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கம்பியுட்டர் பாபா - by Vaanampaadi - 02-17-2005, 06:56 PM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 07:06 PM
[No subject] - by kavithan - 02-18-2005, 12:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)