Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அகராதி
#1
கனவு: சென்ஸாருக்குப் போகாத, செலவே இல்லாத ஒரு குறும்படம்.

புண்ணியம்: நாளைய சொர்க்கத்திற்கு இன்றைய இலஞ்சம்.

காதல்: ஒருவகைக் களவு; என்று பிடிபடுவோம் என்ற பயம் என்றைக்குமே இருக்கும்.

மனசு: ஞாபகங்களைப் போட்டு வைக்கும் ஒருவகைப் பெட்டி.

கண்: காதல் பிறக்கும் இடம்; கண்ணீரின் சொந்த இடம்.

புதுக்கவிதை: ஒருவகைப் புயல்; ஆனால் அழிவு இருக்காது.

மரபுக் கவிதை: ஒருவகைத் தென்றல்; ஆனால் ஒரு அறுப்பும் விளங்காது.

சொர்க்கம்: இல்லாத ஒன்று, நாம் இறக்கின்ற போதே இருக்கும் என்பர்.

நண்பன்/நண்பி: நாம் புழுகுவதையெல்லாம் நம்புகின்ற அல்லது நம்புமாற்போல் நடிக்கும் ஒரு ஜீவன்.

வாழ்க்கை: நாளைய இறப்பிற்கு எம்மைத் தயாராக்குவது.

காசு: கடதாசியினால் உருவாக்கப்பட்ட ஒன்று....மஹாராணி சிரிச்சுக்
கொண்டிருப்பாங்கோ!

கணிதம்: நீங்கள் பாஸாகாத ஒரே ஒரு பாடம் அல்லது அதிக தடவை
கோட்டைவிட்ட பாடம்.

உணவு: நீங்கள் உயிர் வாழ்வதற்கான காரணம்.

கடவுள்: பரீட்சைக்கு முதல் மீதமுள்ள ஒரேயொரு நம்பிக்கை;மனிதனின்
மிகப் புத்திசாலித்தனமானகண்டுபிடிப்பு; அஞ்சு சதத்துக்கும் பிரயோசனம் இல்லாதது.

மனிதன்: வாலில்லாத ஒருவகை குரங்கினம்.

குரங்கு: வாலுள்ள ஒரு மனிதம்.

கண்ணாடி: தளவாடி; நீங்கள் எவ்வளவு அசிங்கம் என்பதற்கான ஒரேயொரு சாட்சி.

காமம்: (பார்க்க உணவு)

அண்ணா: இடைக்கிடை பணம் அனுப்பும் ஒருவகை மனித ஜீவன்.

தமிழ்: உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படும் ஒருவிடயம்.

கண்ணீர்: overflow of sadness that escapes through your eyes.


வலையிலிருந்து சுட்டது
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
அகராதி - by Vaanampaadi - 02-17-2005, 06:27 PM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 06:29 PM
[No subject] - by tamilini - 02-17-2005, 06:49 PM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 10:57 PM
[No subject] - by kavithan - 02-18-2005, 12:26 AM
[No subject] - by Malalai - 02-18-2005, 02:40 AM
[No subject] - by Thusi - 02-18-2005, 06:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)