Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
`குளோனிங்' செல்போன் மோசடி
#1
அடுத்தவர் எண்ணில் இருந்து பேசி மோசடி: `குளோனிங்' செல்போன் மோசடி கும்பல் கைது

ஐதராபாத், பிப் 17-

நவீன தகவல் தொடர்பு சாதனமான செல்போனை பயன்படுத்தி பல்வேறு நூதன மோசடிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது ஐதராபாத்தை சேர்ந்த ஒரு கும்பல் ஒரு படி மேலே போய் `குளோனிங்' செல்போனை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத்தில் டெலிபோன் பூத் வைத்திருக்கும் கடைக்காரர் ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக வழக்கத்தை விட பல மடங்கு கட்டணம் அதிகரித்தபடி இருந்தது. பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் அவருக்கு போன் செய்து உங்கள் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளதே என்ன காரணம் என்று கேட்டனர். அவர்களுடன் அவர் பேசியதே கிடையாது.

சிலர் "உன் கடை எங்கே இருக்கிறது" என்று விலாசம் கேட்டு வந்து மிரட்டல் விடுத்தும் சென்றனர்.

இதுபற்றி அவர் டெலிபோன் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அப்போது குளோனிங் முறையில் ஒரு கும்பல் செல்போனை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

செல்போன் தொழில் நுட்பம் தெரிந்த சிலர் தங்களது செல்போனில் இருக்கும் சாப்ட்வேர்களை நீக்கி விட்டு அதற்கு பதிலாக புதிய சாப்ட்வேர்களை புகுத்தி அதில் தங்களுககு தெரிந்த எண்களை பதிவு செய்து விடுவார்கள்.

இவ்வாறு உருவாக்கப்படும் செல்போனில் இருந்து பேசும் போது அதற்கான பில் தொகை அதில் பதிவு செய்யப்பட்ட எண்ணின் உண்மையான போனுக்கு சென்று விடும்.

இவ்வாறு அவர்கள் 100-க்கும் மேற்பட்ட குளோனிங் செல்போன்களை உருவாக்கி புழக்கத்தில் விட்டு இருக்கிறார்கள்.

செல்போன்களுக்கான புதிய சாப்ட்வேர்கள் இன்டர் நெட்டில் தாராளமாக கிடைப்பதாகவும் அதைப்பயன்படுத்தி இந்த குளோனிங் செல்போன்களை உருவாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து டெலிபோன் மற்றும் செல்போன் உபயோகிப்பவர்களை போலீசார் எச்சரிக்கையுடன் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கைதான மோசடி கும்பலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
`குளோனிங்' செல்போன் மோசடி - by Vaanampaadi - 02-17-2005, 12:01 PM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 12:04 PM
[No subject] - by sinnappu - 02-17-2005, 12:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)