08-21-2003, 05:02 PM
[u][b]ஏன் இந்தக் குழப்பம் ????????
அன்பின் பரணிக்கு,
நமக்குள், சினிமாவை ரசிப்பதிலும் பார்ப்பதிலும் ஒரு பெரிய பிரச்சனை நமக்குள் இருப்பதாகதாகவே நம்மவர் கருத்துகளைப் பார்க்கும் போது எனக்குள் எண்ணத் தோன்றுகிறது.
இதை ஒரு குறை என்று சொல்வதை விட ஒரு நோயாகவே கருத வேண்டியிருக்கிறது.
நம்மால், சினிமாவையும், யதார்த்தத்தையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அறிவு வளரவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அதனால்தான் நாம் குமுறுகிறோம் அல்லது குழம்பிப் போய் விடுகிறோம்.
வளர்ந்த நாடுகளில் வாழும் பார்வையாளர்கள் அல்லது சினிமாவை ரசிக்கத் தெரிந்தவர்கள்: ஏனைய நாடுகளிலும், சமூகங்களிலும் எடுக்கப்படும் திரைப்படங்களை ஒரு கலைப் படைப்பாக அல்லது இன்னுமொரு சம்பவத்தின் ஒரு தாக்கத்தின் காரணமாக உருவாகிய ஒரு திரைப்படமாகத்தான் பார்க்கிறார்கள்.
அதை 100 சதவீதத்தில் உண்மையாக நடக்கும் ஒரு சம்பவமாக கருதுவதோ , கணக்கில் எடுத்துக் கொள்வதோ இல்லை.
கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு பொழுது போக்கு சினிமாவேயன்றி யதார்த்த சினிமாவே அல்ல.
சில்வெஸ்டர் ஸ்டெலோனின் படங்களில் தெரிவது போல் வியட்நாமியரையோ
அல்லது
ஜேம்ஸ்பொன்ட் படங்களில் தெரிவது போல் ரஸ்யர்களையோ மேற் குறிப்பிட்டவர்கள் வென்றதாக சரித்திரமேயில்லை.
காந்தி திரைப்படத்தை எடுத்தவர்கள் இந்தியர்கள் அல்ல. ஆனால் ஒரு சிலர் அத்திரைப்படம் உருவாவதை ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். ஆனால் அத்திரைப்படம் வழி காந்தி என்ற மாபெரும் தியாகியை புதிய உலகம் தெரிந்து கொண்டது. பல விருதுகள் கிடைத்தது.
காந்தி சினிமாவை உருவாக்கியவர்கள் மட்டுமல்ல இந்தியர்களே (எதிர்த்தவர்களும்) பெருமிதம் அடைந்தார்கள்....................
சினிமா என்பது ஒரு கனவுப் பட்டறை.
கனவையும், நிஜத்தையும் வேறுபடுத்தக் கூடிய அறிவும் ஆற்றலும் நமக்கு இருக்கிறதென்றே நினைக்கிறேன்.
உதாரணமாக:-
கனவில் நான் சாவதைக் காண்கிறேன்.எழுந்து பார்த்தால் நான் உயிரோடு இருப்பதை உணரமுடிகிறது.
(கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் என்கிறார்கள்.)
இதுதான் சினிமா...........
உண்மையில் நான் சாவதைப் பார்க்க முடியாது.
ஆனால் சாகப் போவதை உணர முடியும்.
இதுதான் நிஜம்............நிஜம்..........நிஜம்.........
கனவை ஏன் நிஜமாக்க நாம் முயல வேண்டும்.
இது ஒரு தேவையற்ற முயற்சி மட்டுமல்ல.
எதிர்காலத்தில் எமது எதிர்கால சமூகம் ஒரு திரைப் படத்தை உருவாக்கும் எண்ணத்தை நினைத்தே பார்க்க முடியாமல் போகும் ஒரு அபாயமும் , விபரீதமும் உருவாக வாய்ப்புகள் (ஏற்கனவே உள்ளது.) அதிகரித்துவிடும். அப்படியான ஒரு நிலை உருவானால் ?....
மலயாளத்தில் எடுக்கப்பட்ட செம்மீன் யதார்த்தமான ஒரு படம். அங்கே குறையிருந்தால் பிரச்சனைதான்.
இயக்குனர் பாலுமகேந்திராவின் வீடு, சந்தியாராகம் போன்ற படங்களும் யதார்த்தமான படங்கள்.
(இங்கே சிறு சிறு தவறுகள் நேர்ந்தால் குறையேயல்ல.)
சினிமாவுக்காக: ரசிகனைக் கட்டிப் போட சில சினிமா யுத்திகளை சில வேளைகளில் படைப்பாளி செய்யவே வேண்டியிருக்கிறது.
ஆனால் இந்தியன் , முதல்வன்.............(இப்படி எத்தனையை எழுதுவது??????????? ) போன்றவை யதார்த்தத்துக்கு புறம்பான கனவின் உச்ச கட்ட ஆசைகளை காட்டும் கானல் படங்கள்.
பம்பாய்,ரோஜா,நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால்.........................போன்ற பல படங்கள் எங்கோ பார்த்த அல்லது வாசித்த அல்லது தெரிந்து கொண்ட ஒரு கதைக் கருவை மனதில் வைத்துக் கொண்டு உருவாகும் மற்றுமொரு வகை (தாக்கங்களின் வெளிப்பாடுகளான) திரைப்படங்கள்.
இதை ஏன் நிஜம் என்று பெரிது படுத்த வேண்டும்.
இப்படியான கருத்து செய்தியாக அல்லது Documantary டொக்கியுமன்றிப் படமாக (ஆவணப்படம்) வந்திருந்தால் கொதிப்பதில் நிச்சயம் நியாயம் இருக்கிறது.
போராட்ட வீடியோக்களையும் திரைப்படத்தையும் தயவுடன் இணைத்துப் பார்க்காதீர்கள்.
அது வேறு இது வேறு.
இங்கே உறுதியாக இருங்கள்.
இப்படியான எண்ணங்களுக்கு நாம் முடிவு கட்ட வேண்டும் : தெளிவு பெற வேண்டும்.
இல்லாவிட்டால் நடிகன்-நடிகை போல் கணவன்-மனைவி அமைய வேண்டுமென கனவு வாழ்கை வாழ்ந்து , வாழ்வை இருளுக்குள் தள்ளிக் கொண்டவர்கள் போன்ற நிலைக்குத் தள்ளப் படுவோம்.
அந்த மலையாள நண்பருக்கு சொல்லுங்கள் : 10 முதல் 100 பேரைத் தாக்கி விட்டு அநாயாசமாக சட்டை மடிப்பு சுருங்காமல் வரும் சினிமா வீரர்களை உண்மையென்று எப்படி நம்ப முடியுமோ அது போல்தான் இதுவும் என்று.
முன்னைய மலையாளத் திரைப்பட உலகமல்ல
இப்போது இருப்பது.
அங்கும் அதே பல்லவி தொடங்கிவிட்டது. . . . .
மு.கு:கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் படுக்கையறைக் கண்ணாடி முன், கட்டிப் புரண்டு காதல் லீலையில்... ஈடுபட்டவாறு
இளம் ஜோடிகள் பேசிவது கூட ஈழத் தமிழ் அல்ல, அது பாலக்காட்டு மலையாளத் தமிழ் என்று பறையும்... [/color]
மனசிலாயோ என்ட வல்லிய குட்டிக்கு?
அன்புடன்
உங்கள்
அஜீவன்