Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
50ˆ ¦ÅøÖÁ¡ 20Ð???
#1
<b>ருவென்ரி-ருவென்ரி கிரிக்கெட்டின் மவுசு அதிகரித்து வருகிறது</b>

சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் அண்மைக் காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை எது தெரியுமா? ஹருவென்ரி- ருவென்ரி 'ஐம்பதுìÌ - ஐம்பது' பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

கிரிக்கெட் விளையாட்டுக்கு பொதுவாகவே சோம்பேறிகளின் ஆட்டம் என்ற பட்டப்பெயருண்டு கால்பந்து ஹொக்கி கைப்பந்தாட்டத்தைப் போல் ஒரு சில மணி நேரங்களிலேயே கிரிக்கெட் முடிந்துவிடுவதில்லை.
கிரிக்கெட் போட்டியின் முடிவை அறிந்து கொள்ள குறைந்தது ஒரு நாளில் (ஒரு நாள் போட்டி) இருந்து 5 நாட்கள் (டெஸ்ட் போட்டி) வரை செல்லும். இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில் இதற்கெல்லாம் பெரும்பாலானோரால் நேரம் ஒதுக்கமுடிவதில்லை. உலகளவில் பரவலாக கிரிக்கெட் பிரபலமாகாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இதைக் கருத்தில் கொண்டே கடந்த 70 களில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒரு நாள் போட்டிகள் உருவாக்கப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சியே ஹருவென்டி - ருவென்டி' கிரிக்கெட் போட்டி.

அலுவலகத்துக்குச் சென்று வருவோரால் பகலில் நடைபெறும் ஒரு நாள் போட்டியையே முழுமையாகப் பார்த்து ரசிக்கமுடியாது. பகலிரவாக நடைபெற்றாலும் பாதி ஆட்டத்தை மட்டும்தான் பார்க்கமுடியும். இது போன்ற குறைகளைப் போக்கவும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கவுமே இந்த ஹருவென்ரி - ருவென்ரி' கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சரி ஹருவென்ரி - ருவென்ரி'யின் விதிமுறைகள்தான் என்ன? வழக்கமாக ஒரு நாள் போட்டியில் முதல்பாதியில் ஒரு அணி விளையாடுவதற்கு 3 மணி நேரம் தேவை. ஆனால் ருவென்ரி - ருவென்ரியிலோ ஒரு அணி தனது முதல்பாதி ஆட்டத்தை ஒரு மணி நேரம் இருபது நிமிடங்களில் முடித்துவிடலாம்.

இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா. ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா 50 ஓவர்கள் விளையாட வேண்டும் என்பது தெரிந்த ஒன்று. ருவென்ரி - ருவென்ரி மாறுபடுவதே இங்குதான்.

அதாவது இப்போட்டியில் பங்குபெறும் அணிகள் தலா இருபது ஓவர்கள் மட்டுமே ஆடவேண்டும். அதுதான் இப்போட்டியின் முக்கிய விதி.

வழக்கமாக ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 10 ஓவர்களினை வீசலாம். ஆனால் இப்போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் நான்கு ஓவர்களுக்கு மேல் பந்துவீச முடியாது. மேலும் நோபோல்' வீசப்பட்டால் துடுப்பெடுத்தாடும் அணிக்கு வழக்கமாக ஒரு உதிரி ஓட்டம் வழங்கப்படும். அதற்குப்பதிலாக இந்தப் போட்டியில் துடுப்பாட்ட அணிக்கு 2 உதிரி ஓட்டங்கள் வழங்கப்படும்.

மேலும் ஒரு மணிநேரம் இருபது நிமிடங்களில் (80 நிமிடங்கள்) ஒரு இனிங்ஸ் முடிந்துவிடுவதால் இரு அணிகள் ஆடும் முழு ஆட்டத்தையும் மூன்று மணிநேரத்திலேயே ஒருவர் பார்த்துவிடமுடியும். ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்க ஒரு நாள் முழுவதும் காத்திருக்கவேண்டிய பிரச்சினையெல்லாம் இதில் கிடையாது. மாலை 6 மணிக்கு ஒளிவெள்ளத்தில் தொடங்கினால் இரவு 9 மணிக்குள் ஆட்டத்தை முடித்துவிடலாம்.

நீண்ட நேரம் மைதானத்திலேயே அமர்ந்திருக்கவேண்டிய அவசியம் கிடையாது.இப்போட்டிகளில் ஒரு அணி 150 ஓட்டங்கள் எடுத்தாலே அது எதிரணிக்கு மிகக் கடினமான வெற்றி இலக்காக இருக்கும் எனக் கருதப்படுகிறது இங்கிலாந்தில் உருவான இந்த ஆட்டம் அங்கு வேகமாகப் பிரபலமாகி விட்டது.

தென்னாபிரிக்காவிலும் பரவலாக ஆடப்படுகிறது. இதனால் அந்நாடுகளில் கிரிக்கெட் ஆட்டத்தைக் கண்டுகளிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஒரு கணக்கெடுப்பின் போது இங்கிலாந்தில்இ ருவென்ரி- ருவென்ரி போட்டியைப் பார்க்க வந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்க்கையில் முதல்முதலாக மைதானத்துக்கு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
தற்போது இப்போட்டி அவுஸ்திரேலியாவிலும் பிரபலமடைந்துள்ளது. கடந்த ஜனவரி 11 ஆம் திகதி அடிலெய்டில் நடைபெற்ற ருவென்ரி- ருவென்ரி போட்டியில் பாகிஸ்தானும் அவுஸ்திரேலிய ஏ' அணியும் மோதின. இதில் 56 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்ற போதிலும் இப்போட்டியை பெரிதும் வரவேற்றார் பாகிஸ்தான் கப்டன் இன்சமாம் உல் ஹக்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இப்போட்டியை தனது மாநிலங்களுக்கிடையிலான போட்டிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வாரம் தொடங்கவுள்ள நியூஸிலாந்துடனான தொடலிலும் ருவென்ரி- ருவென்ரி போட்டியில் ஆஸி. ஆடவுள்ளது.
தனது பரம எதிரி (கிரிக்கெட்டில்) இங்கிலாந்துடன் ஆண்டுதோறும் நடைபெறும் ஆஷஸ்' (சாம்பல்) தொடரிலும் ருவென்ரி- ருவென்ரி போட்டியில் ஆஸி. ஆடவுள்ளது.
மெல்போர்னில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் ருவென்ரி- ருவென்ரி தொடர்பாக டெஸ்ட் போட்டியில் ஆடும் 10 நாடுகளின் உறுப்பினர்கள் விவாதித்து நல்ல முடிவை எடுத்துள்ளனர்.
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அபய் குருவில்லாவின் முயற்சியால் இந்தியாவின் மும்பையிலும் இப்போட்டி நடைபெறவுள்ளது. ஆனாலும்இ இது பற்றி இலங்கை இன்னும் யோசிக்கவில்லை.இனி ஒரு சினிமாவுக்குச் சென்று வருவது போல் ருவென்ரி- ருவென்ரி கிரிக்கெட் போட்டிக்குச் சென்று வரலாம்.
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
50ˆ ¦ÅøÖÁ¡ 20Ð??? - by Danklas - 02-17-2005, 12:14 AM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 12:19 AM
[No subject] - by Danklas - 02-17-2005, 12:23 AM
[No subject] - by Niththila - 02-17-2005, 12:25 AM
[No subject] - by Danklas - 02-17-2005, 12:30 AM
[No subject] - by Niththila - 02-17-2005, 12:38 AM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 12:43 AM
[No subject] - by sinnappu - 02-17-2005, 12:58 AM
[No subject] - by Danklas - 02-17-2005, 01:02 AM
[No subject] - by vasisutha - 02-17-2005, 01:07 AM
[No subject] - by sinnappu - 02-17-2005, 01:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)