02-16-2005, 06:57 PM
<b>அமைச்சில் பணியாற்றும் ஊழியரைத் தாக்கியதாக டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டு</b>
விவசாய விற்பனை துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அமைச்சிø பணியாற்றும் செயலரின் காரியாலய உதவியாளரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதற்கு எதிராக அமைச்சின் ஊழியர்கள் ஆட்சேபம் ஒன்றை அமைச்சின் செயலாளரிடம் நாளைய தினம் கையளிக்கவுள்ளனர்.
இதில் அமைச்சில் பணியாற்றும் நூறுபேரின் கையொப்பங்களை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சில் பணியாற்றும் யு ஜி பந்துல எனப்படும் ஊழியரை அவருக்கே தெரியாத காரணம் கூறப்பட்டு அமைச்சர் தாக்கியதாக இந்த முறைப்பாட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஊழியர்கள் கருத்துக் கூறுகையில்:
இதுவரை காலமும் அமைச்சு ஒன்றின் ஊழியர் அமைச்சராலோ அல்லது அரசியல்வாதி ஒருவராலோ தாக்கப்பட்டதை தாம் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையானது ஜனநாயக வரம்புகளை மீறுவது மாத்திரமல்லாமல்ää மனித உரிமை மீறலுமாகும்.
சாதாரணமாக அரச ஊழியர் ஒருவர் தவறு செய்வாராக இருந்தால் அதற்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கையை மேற்கொள்வதே நடைமுறையாகும்.
எனினும் இதனை மறுக்கும் வகையில் அமைச்சர் நடந்து கொண்டமையால் தமக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது உரிய இடமாற்றங்களை வழங்கவேண்டும் என அமைச்சின் செயலரிடம் கோரியுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதிää பிரதமர்ää எதிர்க்கட்சித் தலைவர் பொது நிர்வாக அமைச்சர் உட்பட்டோருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...