02-16-2005, 05:24 PM
மதமாற்றம் 90களில் நான் பிரான்ஸ் வந்த புதிதில் இந்த மாற்றவாதிகள் அனேகம்பேரை சந்தித்திருக்கிறேன் உரையாடி வாதங்கள் செய்துமிருக்கிறேன் .குறிப்பாக அவர்கள் எமது பலவீனங்களையறிந்து அதாவது வதிவிட பிரச்சனை வேலையின்மை மொழி பிரச்சனை இப்படியான பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட மனஉளைச்சலில் உள்ளவர்களை இலகுவில் பேசி பேசியே தங்கள் பக்கம் இழுப்பதில் வல்லவர்கள் குறிப்பாக இவர்களது அணுகுமுறை குடியேற்றவாசிகளை நோக்கியதாகவே இருக்கும்.ஆனாலும் மற்றைய சமூகங்களைவிட ஈழத்தமிழர் சமூகத்தில் இவர்களின் போதனைகள் அதிகளவு வெற்றியை கொடுக்கவில்லையென்பதே உண்மை.அதற்கு எமது பழகிப்போன கலாச்சார சமூக கட்டமைப்பும் ஒரு காரணமாகும்.2000ம் ஆண்டுகளளவில்எம்மிடையே இவர்களின் போதனைகள் மிகவும் குறைந்துபோயிருந்தது. காரணம் இவர்கள் இந்த 2000ம் ஆண்டு உலகம் அழிக்கப்படும்.அப்போது கர்த்தரை நம்பியவர்களே காப்பாற்றபடுவார்கள் என்றுமிரட்டியே அதிகளவு போதனைகளில் ஈடுபட்டனர்.ஆனால் 2000த்தில் பெரிதாக எதுவும் நடைபெறாததால்.இவர்களின் போதனையும் சோர்ந்து போயிருந்தது..ஆனால் அண்மையில் நடந்த சுனாமி அனர்த்தத்தின் பின் இவர்களின் பிரச்சாரம் மீண்டும் எம்மவர்மத்தியில சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது கைகளில் புத்தகங்களுடன் வலம்வர ஆரம்பித்து விட்டார்கள்.எனவே இவர்களைபற்றியதும் இவர்களின் மதங்களை பற்றியதுமான ஆரோக்கியமான விமரிசனங்களை முன் வையுங்கள்...
; ;

