02-16-2005, 01:26 PM
சேர் பொன். இராமநாதன்
...சேர் பொன். இராமநாதன் 75 சதவீதத்துக்குமேல் அவருடைய நேரத்தை சிங்கள சமுதாயத்துக்கும் பௌத்த மதத்துக்கும் தான் செலவழித்தார் என்பது நாமறிந்த உண்மை. இன்று வெசாக் தினம் பொதுசன விடுமுறையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் சிங்கள மக்களிடம் தாங்க முடியாத தானிய வரியை அறவிட்டு அதன் விளைவாக அவர்கள் அடைந்த துன்பத்தை நாம் அறிவோம்.
1915 ஆம் ஆண்டில் சிங்கள முஸ்லிம் கலவரம் தோன்றிய காலத்தில் அனேக சிங்களத் தலைவர்களை பிரித்தானிய அரசாங்கம் அவர்களைச் சிறைக்கு அனுப்பி எந்த நேரத்திலும் மரணதண்டனையை எதிர்பார்த்தனர்.
இந்தக் கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாத சேர் பொன். இராமநாதன் தனது உயிரையும் மதிக்காமல் இங்கிலாந்து சென்று சிங்கள தேசியத் தலைவர்களுக்கு உயிர்ப் பிச்சை எடுத்துக் கொடுத்தார். இந்த வெற்றியை அடைந்த பின்பு சேர் பொன். இராமநாதன் வெற்றிவாகையுடன் திரும்பிவந்த பொழுது அவரை கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவருடைய வீடுவரை சிங்களத் தலைவர்கள் குதிரைகளாக மாறி அவரை வண்டியில் வைத்து அவர் வீடு வரை அழைத்துச் சென்றமை சகலருக்கும் தெரிந்த விடயம்.
அவர் சிங்களத் தலைவர்களுக்கு (உயிர்ப்பிச்சை) எடுத்துக் கொடுத்ததற்கு தங்கள் நன்றியை பகிரங்கமாகச் செய்தார்கள். சேர் பொன்.இராமநாதனுடைய சேவையை சிங்களத் தலைவர்கள் மறந்து அவருக்கு மிகக் கொடிய துரோகத்தை உண்டு பண்ணியது இன்றுவரை தன்மானமுள்ள எந்தத் தமிழனும் மறக்கமாட்டான். அவருடைய பிற்கால வாழ்க்கை மிகவும் விரக்தியடைந்த ஒன்று. இன்று யாழ். குடா நாட்டில் அவர் விரக்தியின் காரணமாக திருநெல்வேலியில் பரமேஸ்வரா கல்லூரியை ஸ்தாபித்தும் சுன்னாகத்தில் பெண்களுக்கு ஒரு தனியான கல்லூரியையும் அமைத்தார். அவர் அடைந்த விரக்தியை இது நன்கு புலப்படுத்திவிட்டது.
இதன் விளைவாக இன்று அந்த இரு ஸ்தாபனங்களும் பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுவிட்டன. அவர் துயரத்தில்தான் தனது பிற்கால வாழ்க்கையை செலவழித்தார்.
மேற்கோள்