Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?
#1
அன்பான நண்பர்களே,
அவசரப்படாது கீழே தரப்பட்டுள்ள விடயத்தை முழுமையாக வாசித்துவிட்டு உங்கள் கருத்தை முன்வையுங்கள்.

அண்மையில் "கங்காரு ஏன் நான்கு கால்களில் நடப்பதில்லை" என்றொரு சிறுவர்களுக்கான தமிழ்ப் புத்தகம் வாசித்தேன். அதிலே கங்காரு நான்கு கால்களில் நடக்காததற்கான காரணத்தைக் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆரம்ப காலத்தில் கங்காருவும் ஏனைய விலங்குகளைப்போல் நான்கு கால்களிற்தான் நடந்து திரிந்தது. ஒருநாள் அது உணவை உட்கொண்டுவிட்டு இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தின் கீழ் படுத்திருந்தது. அப்போது காடு தீப்பற்றிக்கொண்டது. வேகமாகப் பரவிய காட்டுத்தீயில் இருந்து தப்புவதற்காகக் கங்காரு கடுமையாகப் போராடியது. இறுதியில் அது காட்டுத்தீயிலிருந்து தப்பும்போது அதன் இரு முன்னங்கால்களும் தீயில் எரிந்து இப்போது இருக்குமளவிற்கு சிறியதாகிவிட்டன. அதனாற்தான அதன் முன்னங்காலின் அடிப்பகுதி கறுப்பாக இருக்கின்றது.

சரி இனி விடயத்திற்கு வருகிறேன். விஞ்ஞான ஏணியில் உலகம் தற்போது இருக்கும் இடம் என்ன? நாம் இப்போதும் எவற்றை எமது குழந்தைகளுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கின்றோம்? விஞ்ஞானத்திற்கும் எமக்கும் இடையிலான தொடர்பு இப்போதும் நேர்மாறுவிகித சமனாகத்தான் இருக்கின்றதா என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
புத்தகத்தைப் படித்துவிட்டு இது இலங்கையில் அல்லது இந்தியாவில் அச்சடித்த புத்தகமாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட்டுப் பார்த்தால் அது அவுஸ்திரேலியாவில் அடித்த புத்தகம். அடப் பாவிகளா தமிழ் படிப்பிக்கிறோம் என்று கிழம்பி இதைத்தானா செய்துகொண்டிருக்கிறியள்.
Reply


Messages In This Thread
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்? - by kasthori - 02-16-2005, 12:08 PM
[No subject] - by வியாசன் - 02-16-2005, 12:17 PM
[No subject] - by kasthori - 02-16-2005, 12:26 PM
[No subject] - by sinnappu - 02-16-2005, 02:37 PM
[No subject] - by Kurumpan - 02-16-2005, 03:59 PM
[No subject] - by sinnappu - 02-16-2005, 09:21 PM
[No subject] - by Niththila - 02-17-2005, 12:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)