Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய டென்னிஸ்மங்கை சார்னியாமிர்சா
#1
<b>100 வீராங்கனைகளுக்குள் இடம்பிடித்தார் டெனிசில் சானியாமிர்சா-மேலும் ஒரு புதிய சாதனை </b>

<img src='http://img56.exs.cx/img56/153/mir3266i9ko.jpg' border='0' alt='user posted image'>
<b>சானியா மிர்சா </b>

இந்திய டென்னிஸ் மங்கை சார்னியா மிர்சா டென்னிஸ் தரவரிசையில் 100 இடங்களுக்குள் வந்துள்ளார். இது இவரது சாதனையாகும்.

இந்திய டென்னிஸ் வீராங் கனை சானியா மிர்சா (வயது 18 ) உலக அளவில் பிரகாசிக்க தொடங்கி இருக்கிறhர் அல்லவா? கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் 3-வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் கிராண்ட்ஸ் லாம் போட்டியில் இத்தகைய உயர்ந்த நிலையை எட்டிய முதல் வீராங்கனை 2 தினங்களுக்கு முன்பு ஐதராபாத் ஓபன் பட்டத்தை வென்று சர்வதேச மகளிர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என அடுத்தடுத்து இரு சாதனை களை புரிந்த மிர்சாவுக்கு தற்போது மேலும் ஒரு கிரிடம் சூட்டப்பட்டு உள்ளது.

சர்வதேச டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 134-வது இடம் வகித்து வந்த சானியா மிர்சா, ஐதராபாத் போட்டியில் சாதித்ததன் மூலம் 35 இடங்கள் முன்னேறி 99-வது இடத்தை பெற்று உள்ளார். உலக அளவில் 100-வது இடங்களுக்கு வந்த முதல் இந்திய வீராங்கனை சானியா தான். அவர் மொத்தம் 371 புள்ளிகள் பெற்று இருக்கிறார். ஆஸி. ஓபனுக்கு முன்னதாக சானியா 166-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீராங்கனை நிருபமா சஞ்சீவ் 1998-ம் ஆண்டு அதிக பட்சமாக 134-வது தரநிலையில் இருந்தார். அதனை சானியா ஏற்கனவே முறியடித்து விட்டார்.

சானியாவின் தொடர் சாதனைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மற்றொரு இந்திய வீராங்கனை ருஷ்மி சக்ரவர்த்தி 349 இடத்தில் உள்ளார்.

பெண்கள் பிரிவில் அமொpக்காவின் தேவன்போர்டு தொடர்ந்து முதலிடத்தை வகிக்கிறார். ஆஸி. சாம்பியன் அமரிக்காவின் சரினா வில்லியம்ஸ் 2-வது இடத்தில் உள்ளார். பிரான்சின் அமலி மவுரஸ்மோ 3-வது இடம் வகிக்கிறார்.

ஜூனியர் ஆண்கள் தர வாரிசையில் இந்திய இளம் வீரர் ஜவன் நெடுஞ்செழியன் 34-வது இடத்தை பிடித்து உள்ளார். 16 வயதான இவர் சென்னையை சேர்ந்தவர். மற்ற இந்திய ஜூனியர் வீரர்கள் விவேக் ஷேகீன் 43-வது இடமும், சானம்சிங் 89-வது இடமும் பெற்று உள்ளனர்.

<b>சானியாவுக்கு ரூ.2லட்சம் பரிசு </b>

சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத் ஓபன் மகளிர் சர்வதேச பட்டத்தை கைப்பற்றிய இந்திய இளம் புயல் சானியா மிர்சாவுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று கே.கே.பிர்லா பவுண்டேசன் டெல்லியில் அறிவித்து உள்ளது. இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பு மிக்க பெருமை சானியாவுக்கு கிடைத்தது. இதை கவுரவிக்கும் வகையில் இந்த பரிசு தொகை வழங்கப்படுவதாக அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான பிர்லா கூறினார்.


நன்றி தினகரன்
Reply


Messages In This Thread
இந்திய டென்னிஸ்மங்கை சார்னியாமிர்சா - by vasisutha - 02-15-2005, 08:07 PM
[No subject] - by Danklas - 02-15-2005, 10:08 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 10:24 PM
[No subject] - by Danklas - 02-15-2005, 10:29 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 11:02 PM
[No subject] - by Danklas - 02-15-2005, 11:11 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 11:13 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 11:16 PM
[No subject] - by Danklas - 02-15-2005, 11:29 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 11:36 PM
[No subject] - by shiyam - 02-16-2005, 02:16 AM
[No subject] - by Malalai - 02-16-2005, 05:16 AM
[No subject] - by Danklas - 02-16-2005, 12:37 PM
[No subject] - by tamilini - 02-16-2005, 02:24 PM
[No subject] - by KULAKADDAN - 02-16-2005, 04:31 PM
[No subject] - by Danklas - 02-16-2005, 05:37 PM
[No subject] - by sinnappu - 02-16-2005, 09:19 PM
[No subject] - by Danklas - 02-16-2005, 09:26 PM
[No subject] - by Malalai - 02-16-2005, 09:32 PM
[No subject] - by Danklas - 02-16-2005, 10:12 PM
[No subject] - by Malalai - 02-16-2005, 10:24 PM
[No subject] - by sinnappu - 08-09-2005, 07:16 AM
[No subject] - by Mathan - 08-09-2005, 07:33 AM
[No subject] - by vasisutha - 08-09-2005, 11:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)