02-15-2005, 06:25 PM
காரைதீவு மாமரங்களில் "தேன் கொட்டும்' அதிசயம்
செவ்வாய்கிழமை 15 பெப்ரவரி 2005 நல்லையா குமரகுருபரன்
காரைதீவிலுள்ள மாமரங்களில் கடந்த இருதினங்களாக தேன் வடிந்து கொண்ருக்கிறது. காரைதீவிலுள்ள 7 மாமரங்களின் இலைகளிலிருந்து தேன் வடிவதை காண முடிகிறது.பகல் வேளைகளில் மழைதூறல் போன்று தேன் கொட்டுவதை காணக்கூடியதாகவுள்ளது. மாணிக்கம் வல்லிபுரம் என்பவரின் வீட்டிலுள்ள மாமரத்தில் பொலிதீன்பை கட்டியுள்ளனர். அதனுள் 1/4 போத்தல் அளவில் வடிந்துள்ளது. சாமித்தம்பி வேல்முருகு என்பவரின் வீட்டிலுள்ள இரு மாமரங்களிலுமிருந்து தேன் வடிந்து நிலத்தில் படையாகக் காட்சியளிக்கிறது. பூத்த மாமரத்திலிருந்தும் பூக்காத மாமரத்திலிருந்து தேன் கொட்டுகிறது. தொட்டு நக்கிப்பார்த்தால் இனிக்கிறது. அதேவேளை அட்டாளைச்சேனை பகுதியிலும் சில மா மரங்களில் தேன் வடிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுனாமிக்கு பின்னரான இந்த அதிசய நிகழ்வுக்கு தரையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அல்லது காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாமோ என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
Source : http://www.nitharsanam.com/?art=8816

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>