Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புறாக்களுக்கு உணவு கொடுத்த பெண்ணுக்கு ஜெயில்
#1
புறாக்களுக்கு உணவு கொடுத்த பெண்ணுக்கு ஜெயில்

அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதுப் பெண் ஒருத்தி, புறாக்களுக்கு உணவு கொடுத்ததால், ஜெயிலில் அடைக்கப் பட்டாள்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதலே அன்னா ஸ்டாஹன் சிக், புறாக்களுக்கு உணவு தானியங்களை தீனியாக அளித்து வந்தார்.

அதிக அளவில் பறவைகள், உணவு எடுக்க வந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளை அவை அசுத்தப்படுத்தின. இதனால் அண்டை வீட்டார் புறாக்களுக்கு உணவு கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதை அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளாததால் அவர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

நீதிபதி பிராங் பிரெஜியாட்டோ, புறாக்களுக்கு உணவு போடவேண்டாம் என்று எச்சரித்தார். அதற்குச் சம்மதம் தெரிவித்த அன்னா, தொடர்ந்து புறாக்களுக்கு உணவு கொடுத்து வரத்தொடங்கினார்.

இதை அக்கம் பக்கத்தினர் வீடியோ படம் எடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவை மீறி, புறாக்களுக்கு உணவு கொடுத்ததற்காக அவருக்கு ஒரு வாரம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
புறாக்களுக்கு உணவு கொடுத்த பெண்ணுக்கு ஜெயில் - by Vaanampaadi - 02-15-2005, 11:37 AM
[No subject] - by Danklas - 02-15-2005, 01:29 PM
[No subject] - by vasanthan - 02-15-2005, 06:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)