02-15-2005, 08:33 AM
அன்பு பல வகைப்படும். பாசம், நட்பு, பரிவு போன்றவற்றை போல காதலும் அன்பின் ஒரு வகை. இவற்றுள் காதல் ஒன்று தான் காமத்தை அடிப்படையாக கொண்ட அன்பு. காமம் இல்லாமல் காதல் ஏற்பட போவதில்லை. காமம் இல்லாத அன்பு நட்பாக அமையக் கூடும்.
கண்ணீர் கதைகள் வருவதற்கு காரணம் முட்டாள்தனம். பாதுகாப்பற்ற பாலியல் உறவு, கர்ப்பம் வரைக்கும் போகும் போது கண்ணீர் கதையாகும். பலர் அறிய ஊர் சுற்றும் சோடி, ஒரு பின்தங்கிய சமுதாயத்தில் மற்றவர்கள் கதைப்பதை பற்றி கவலைப்பட ஆரம்பித்தால் கண்ணீர் கதையாகும்.
ஆகவே அடிப்படையில், தாம் யார் மத்தியில் வாழ்கிறோம், மற்றவர்களின் விமரிசனங்கள் தங்களை பாதிக்குமா, போதுமான பாலியல் அறிவு தமக்கு உண்டா, என்பவற்றை சிந்திக்காதவர்கள் தான் கண்ணீர் கதைகளின் கதாபாத்திரங்கள் ஆகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது பாடசாலைகளில் பாலியல் கல்வி அறிமுகப்படுத்த்ப் பட்டுள்ளதாக செய்திகள் வந்திருந்தன. வரவேற்கப்பட வேண்டிய விடயம். பாதுகாப்பான பாலியல் உறவு, பாலியல் உறவால் உருவாகக்கூடிய சமூகவியல் பாதிப்புகள் என்பனவும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.