Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துணை நடிகையின் கள்ளக் காதலன் தற்கொலை!
#1
பிப்ரவரி 14, 2005

துணை நடிகையின் கள்ளக் காதலன் தற்கொலை!

சென்னை:

திருமணமான துணை நடிகையுடன் லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கிய திருமணமான டப்பிங் ஆர்டிஸ்ட் தற்கொலை செய்து கொண்டார்.

துணை நடிகையான அமிதா (38) திருமணமானவர். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் சினிமா டப்பிங் பின்னணி குரல் கொடுப்பவரான ராஜசேகருக்கும் (43) இடையே கள்ளக் காதல் இருந்து வந்தது. ராஜசேகரும் திருமணமானவர், இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன் தினம் இருவரும் திருத்தணியில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கினர்.

அமிதா லாட்ஜ் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராஜசேகர் மட்டும் அறைக்குள் சென்றார். நீண்ட நேரமாகியும் கதவை ராஜசேகர் திறக்காததால் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார் அமிதா.

அப்போது ராஜசேகர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அமிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியது. அப்போது தெரிய வந்த விவரங்கள்:

10 ஆண்டுகளாக ராஜசேகர்அமிதா இடையில் கள்ளக் காதல் இருந்து வந்தது. இந்த விவரம் அமிதாவின் கணவருக்கு சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து கணவர் அவரை கண்டித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் திருத்தணிக்கு வந்துள்ளனர். இந் நிலையில் தான் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அமிதா நெருக்கியதால் தான் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
துணை நடிகையின் கள்ளக் காதலன் தற்கொலை! - by Vaanampaadi - 02-14-2005, 02:17 PM
[No subject] - by Kurumpan - 02-15-2005, 12:14 AM
[No subject] - by sinnappu - 02-15-2005, 12:18 AM
[No subject] - by kuruvikal - 02-15-2005, 12:19 AM
[No subject] - by Kurumpan - 02-15-2005, 12:35 AM
[No subject] - by shanmuhi - 02-15-2005, 12:37 AM
[No subject] - by Danklas - 02-15-2005, 12:48 AM
[No subject] - by Kurumpan - 02-15-2005, 12:53 AM
[No subject] - by Danklas - 02-15-2005, 01:04 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)