02-14-2005, 12:38 PM
நட்சத்திரங்களின் காதல் - காதலர்தின ஸ்பெஷல்
<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/n11a.jpg' border='0' alt='user posted image'>
இன்று காதலுக்கு ரெக்கை முளைக்கும் தினம்! கடவுள் இல்லாத மனிதர்கள் உண்டு. காதல் இல்லாத மனங்கள் இல்லை. அந்த மனங்கள் ஒன்றையொன்று அறிந்து காதலில் ஐக்கியமாகும் தினம் இது. காதலை வளர்க்கும் சினிமா நட்சத்திரங்கள் காதலை குறித்து என்ன சொல்கிறார்கள்?
அஜித்: காதல் என்பது புரிதல். காதலிக்கும் போது மைனஸ் தெரியாது. எல்லாமே 'ப்ளஸ்' ஆக தெரியும். திருமணத்திற்குப் பிறகும் அதே போல் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், அதுதான் உண்மையான காதல். காதலிக்கும் போது இருக்கும் ஆர்வம், காத்திருத்தல் எல்லாமே கல்யாணத்திற்குப் பிறகும் நீடித்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால், காதல் எப்போதுமே புதிதாக இருக்கும்.
thaனுஷ்: பதினாறில் இருந்து பதினெட்டு வயதுக்குள் வரும் காதல், அம்மா-அப்பா பற்றி யோசிக்காது. முதல் காதல் 90 சதவிகிதம் வெற்றி பெற்றது கிடையாது. அந்த காதல் திருமணத்தில் முடிந்தால் அவன் கொடுத்து வைத்தவன்... அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன்!
பாலாஜி சக்திவேல்: பருவ வயதிற்கு மேல் வரும் காதல் சாதி, மதம், பணம் பார்த்து வருவது. ஆகவே பருவத்துக்குள் வருகிற உணர்வுதான் காதல். அதை காலம் உள்ளவரை மறக்கமுடியாது.
ராதிகா: காதல் புனிதமானது. காதல் இல்லையேல் பூமி இல்லை. காதலுக்கு வயது ஒரு தடையல்ல. தாய்க்கு குழந்தை மீது வருவதும் காதல்தான்.
நமிதா: காதல் ரொம்ப மென்மையானது. காதலர் தினத்தில் பொக்கே, கார்ட்ஸ், கிப்ட் என்று நிறைய வரும். கூடவே மெதுவாக காதலை ஓபன் செய்வாங்க. நான் நாசுக்காக இதை மறுத்திடுவேன். ஏன்னா என் மனதில் ஏற்கனவே வேறொருத்தர் இருக்கார்.
விஜய்: காதல் பொதுவானது. அது காதலர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் என் ரசிக்ர்களிடம் வைத்திருப்பதும் காதல்தான். காற்று இருக்கும் இடமெல்லாம் காதலும் இருக்கும்.
இவர்களைத் தவிர த்ரிஷா, ஹரிணி, சினேகா, அனாமிகா, ரீமாசென், ஜோதிகா என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே காதலுக்கு ஜே போடுகிறது.
CineSouth

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>