02-14-2005, 11:15 AM
Mathan Wrote:காதல் கசக்குமா...?
இதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு.
நன்றி - சந்திரவதனா
இந்தக் கட்டுரையாளருக்கு ஆணை " ஆண் " என்ற பதத்தில் வைக்க இருந்த ஆர்வம் அவனுக்குள் எழும் உணர்வுகளை எடைபோட இருக்கவில்லை...! மனித உணர்வுகளை சரிவர எடை போட முடியாதவர்களால் சமூகத்தை எப்படி எடை போட முடியும்... சபலம் என்பது ஒரு மனிதன் தான் கொண்டுள்ள மன உறுதி நிலையின் வெளிப்பாடு...அவனின் மனக்குழப்ப நிலையை தெளிவில்லா நிலையையே அதுகாட்டுகிறது.. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது...!
காதலுக்கு அடிப்படை புரிந்துணர்வும் அன்பும் அரவணைப்பும்...அவற்றை ஒருவர் தன் பங்கிற்கு வழங்கினால் கூட மற்றவரிடமும் தானும் அவற்றை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக உருவாகும்..! ஆண்களோ பெண்களோ சபலிக்கக் காரணம்... அவர்களின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமையும் மனத்திருப்தியின்மையுமே...!
காதலிக்கும் போது தேனாக இருந்தவள்/ன் திருமணமாகியதும் கசப்படுது ஏனோ...மனம் கொண்ட நிலையின் மாற்றத்தால் தான்...! அதற்கு ஆண் கொண்ட நிலையல்ல காரணம்...மனங்கள் கொண்ட நிலையே...! உங்கள் உங்கள் மனத்தை கொண்ட கொள்கையின் வழி வழிநடத்தத் தெரியவில்லை என்பதற்காக ஆண் என்பவன் மீது குற்றம் சுமத்துதல் என்பது கூட பலவீனமே...அதுவும் ஒரு மனநிலைச் சபலத்தின் தோற்றமே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

