02-13-2005, 04:28 AM
anpagam Wrote:நன்மாறன் நெடுஞ்செழியன் குமணன்
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி மன்னர் மன்னன்
அன்பழகன் அறிவழகன் கண்ணன் வேலன்
அழகரசன் இளங்கோவன் கீரன் என்றே
இன்சுவையாய் இவைபோல பெயர்கள் உண்டு
இன்று ரமேஷ் சுரேஷ் கார்த்திக் ஆகின்றாரே
தென்னவனின் வழிவந்த என்னவர்க்குத்
தமிழ்ப் பற்றை அவர் பெயரில் தழுவச் செய்வோம்
தன்மான உணர்வென்பார் கவரிமானின் தோன்றலாக
மானுடத்தைப் பெற்றேன் என்பார்.
பொன்நகையில் செம்புதன்னை கலத்தல் போல
பூக்களிடை நச்சுமரம் விளைதல் போல
என்.மாறன் எம்.எஸ்.கே பொன்னன் என்றே
ஆங்கிலத்தில் கலப்படம்தான் செய்கின்றாரே
முன்னெழுத்தைத் தமிழ் எழுத்தால் எழுதச் செய்யும்
மூளையுள்ள தமிழனுடன் நட்புக் கொள்வோம்.
இது தொடர்பில் கள உறுப்பினர்களின் கருத்து என்ன? ஏற்கனவே உள்ள தமிழர்களில் மற்றய மொழி கலப்பு பெயர்களை தமிழில் மாற்ற வேண்டுமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

