02-13-2005, 04:21 AM
தலைவர் பிரபாகரன் அவர்கள் சிறு கைத்துப்பாக்கியுடன் இந்த போராட்டத்தை முன்னெடுத்த பொழுது பெரியவர்கள் பலர் "சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று கருத்து தெரிவித்தார்கள். ஆனால் அவரோ தான் என்ன செய்கிறேன் என்று நன்கு அறிந்து அதில் நம்பிக்கை வைத்து தன்னைப்போல இதேவிதமான எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து தனது முழுத்திறனுடனும் செயற்பட்டதனால் இன்று தமிழ் மக்கள் தங்களுக்கெண்டொரு நிலப்பரப்பை ஆட்சி செய்யக் கூடியதாக இருக்கிறது.
எதுவும் "உது பயனற்றது" என்று சொல்ல பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். இப்படி சொல்வதும் இலகுவானது. பயனுள்ள ஒரு சிறு செயலைத்தானும் மனம் வைத்து செய்வது தான் கடினமானது. அப்படி செயபவர்களால் தான் மனிதம் நிலைக்கிறது. மக்களுக்கு வாழ்வு கிடைக்கிறது.
ஒரு நிறுவனம் எப்படி இயங்குகிறது என்பதை விளங்கிக்கொண்டால் அதனுடன் எப்படி செயற்பட வேண்டும், நாங்கள் என்ன பங்களிப்பை செய்யலாம் என்பதை பற்றி பயனுள்ள முடிவுக்கு வரமுடியும்.
வரலாற்றின்படி, ஐ.நா. சபை உலகயுத்தத்தில் வென்ற நாடுகள் அமெரிக்கா, பிரித்தானிய தலைமையில், மீண்டும் இன்னுமொரு யுத்தம் இவ்வாறாக உருவாகாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதன் பாதுகாப்பு சபையில், வென்ற நாடுகள், உலக வல்லரசுகள் என்று தாம் கருதும் நாடுகளை அங்கத்துவராக ஏற்றுக் கொண்டன. தோற்ற நாடுகளான யப்பானும் ஜேர்மனியும் இதில் இல்லை. மாறாக யப்பானிலும் ஜேர்மனியிலும் அமெரிக்க முகாம்கள் நிலையாக அமைக்கப்பட்டு, ஜேர்மனி கிழக்கு மேற்கு என இரண்டாக பிளக்கப்பட்டு, ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் கட்டுப்பாடு வழங்கப்பட்டது.
ஆகவே ஐ.நா. சபை, உலக அளவில் 2ம் உலகயுத்தத்தில் வென்ற நாடுகள், ஏனைய நாடுகளை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட அமைப்பு என்றால் அது தவறாகாது.
அமெரிக்கா அதில் முதன்மையான நாடு. ஐ.நா. அமெரிக்கா சொல்வதை நிச்சயமாக கேட்டு அதன்படி தான் நடக்கும். அதே வேளை உலக நாடுகளை பொறுத்தளவில், ஐ.நா. சபை உலகை இந்த வல்லரசுகளின் உதவியுடன் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஐ.நா. வுடனும் அமெரிக்காவுடனும் பகைப்பது பக்கத்து வீட்டு சண்டியனுடன் பகைத்துக் கொண்டு வாழ்வது போன்றது. நிம்மதியாக வாழ முடியாது.
ஆகவே தான் விடுதலைப்புலிகள் ஐ.நா.வுடனும் அமெரிக்காவுடனும் நட்புடன் வாழ கடும் முயற்சி செய்கிறார்கள். எதிரிகளோ ஐ.நா.வையும் அமெரிக்காவையும் தங்கள் பக்கம் ஈர்க்கப்பார்க்கிறார்கள்.
அமெரிக்கா, ஐ.நா.வைப் பொறுத்தளவில் சிறிலங்கா பின்தங்கிய ஒரு சிறிய சுற்றுலா தீவு. அவர்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது, அவர்களுடன் யார் கூடுதலாக தொடர்பு கொண்டு அதிகம் செய்திகள் சொல்கிறார்கள், உறவு கொண்டாடுகிறார்கள், நட்புடன் பழகுகிறார்கள் என்பதில் நிறைவே தங்கியிருக்கிறது. சிஙகளவர் மத்தியிலுள்ள இனவெறியரும், தமிழர் மத்தியிலுள்ள விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்களும், அமெரிக்கவுடனும், ஐ.நா.வுடனும் சிறப்பான உறவை பேணி அதிகம் தொடர்பு கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.