Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்வதேச பயணத்தடை? யாருக்கு
#1
சர்வதேச பயணத்தடை? யாருக்கு

சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் சேர்த்தால் விடுதலைப்புலிகளுக்கு இனிமேல் சர்வதேச பயணத்தடை விதிக்க நேரிடும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை குறித்து அரசியல் அவதானிகள் பல்வேறு தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

சிறுவர்களைப் படையில் சேர்ப்பதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது தென்னிலங்கை ஊடகங்களின் செய்திகளை ஆதாரமாக்கொண்டு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விடுதலைப்புலிகள் சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்துவிட்டனர்.

யுத்தத்தால் பெற்றோரை இழந்த சிறுவர்களை தாம் அநாதை இல்லங்களில் பராமரித்து வருவதாகத் தெரிவித்த விடுதலைப்புலிகள் வன்னிக்கு விஜயம் செய்த பன்னாட்டு தொண்டு அமைப்புக்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் இந்த அநாதை இல்லங்களுக்கு அழைத்துச் சென்றும் காண்பித்துள்ளனர். அண்மையில் ஆழிப்ரேலை அனர்த்தத்தின்போதும் இவ்வாறான ஒரு அநாதை இல்லத்தை அலை அள்ளிச் சென்றிருந்தது.

இதைவிடää விடுதலைப்புலிகள் அமைப்பி;ல் இணையவென வரும் 18 வயதுக்கு குறைந்தவர்களை விடுதலைப்புலிகள் யுனிசெவ் பிரதிநிதிகளின் முன்னிலையில் பெற்றோரிடம் மீPள ஒப்படைத்துவருகின்றனர். இவற்றையெல்லாம் மீறி சிறுவர்களை படையில் சேர்ப்பதாக அறிக்கை விடுவதில் என்ன யதார்த்தம் உள்ளது?

'சிறீலங்காவுக்கு வருகைதந்த போது ஆழிப்பேரலையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான முல்லைத்தீவை பார்வையிட விடாமல் கோபி அனானுக்கே சர்வதேசப் பயணத்தடை விதித்த சிறீலங்கா அரசின் பரிந்துரைகளைக்கு செவிமடுத்துத்தான் ஐ.நா. இவ்வாறான ஒரு அறிக்கை விடுத்ததா?"- என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.




நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
சர்வதேச பயணத்தடை? யாருக்கு - by வியாசன் - 02-11-2005, 03:03 PM
[No subject] - by sinnappu - 02-11-2005, 03:11 PM
[No subject] - by Danklas - 02-11-2005, 03:19 PM
[No subject] - by Mathuran - 02-11-2005, 03:44 PM
[No subject] - by Mathuran - 02-11-2005, 03:47 PM
[No subject] - by tamilini - 02-11-2005, 04:14 PM
[No subject] - by shiyam - 02-11-2005, 06:21 PM
[No subject] - by aathipan - 02-11-2005, 09:04 PM
[No subject] - by sinnappu - 02-12-2005, 12:04 AM
[No subject] - by Niththila - 02-12-2005, 01:12 AM
[No subject] - by sinnappu - 02-12-2005, 01:42 AM
[No subject] - by anpagam - 02-12-2005, 01:42 AM
[No subject] - by Niththila - 02-12-2005, 02:00 AM
[No subject] - by anpagam - 02-12-2005, 02:12 AM
[No subject] - by Niththila - 02-12-2005, 02:15 AM
[No subject] - by sinnappu - 02-12-2005, 08:13 AM
[No subject] - by Niththila - 02-12-2005, 02:20 PM
[No subject] - by MEERA - 02-12-2005, 05:17 PM
[No subject] - by sinnappu - 02-12-2005, 07:38 PM
[No subject] - by MEERA - 02-13-2005, 01:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)