Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா. செயலாளர் அன்னான் கௌசல்யன் கொலை பற்றி கவலை, கண்டனம்.
#9
ஐ.நா.வின் கண்டனம் தமிழரின் போராட்டத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்டதற்கு உதாரணம்

தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு

விடுதலைப் புலிப் போராளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளமைஇ தமிழ் மக்களின் போராட்டம் நீதியும் நியாயமானதும் என்பதை சர்வதேச சமூகம் நன்குணர்ந்திப்பதை எடுத்துக் காட்டும் நல்லதோர் உதாரணமென சுட்டிக் காட்டியுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் மக்களின் சக்தியோடும் தலைவரின் வழி காட்டுதலிலும் விடுதலைப் போராட்டத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோமெனத் தெரிவித்துள்ளார்.

வெலிக்கந்தையில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மட்டு.- அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் ஏனைய போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட வேளையில் மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி உரையாற்றிய போதே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது:-

தமிழ் மக்களின் போராட்டம் நீதியானது நியாயமானது என்பதை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்திருக்கிறது. மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் ஏனைய விடுதலைப் புலிப் போராளிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கண்டித்து அனுதாபம் வெளியிட்டுள்ளமை எமது உரிமைப் போராட்டம் உலக அரங்கில் பலப்பட்டிருக்கிறது என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும்.

ஆனால் எதிரிகள் மட்டும் தான் எதையும் உணராமல் தமது சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழத்தை அழிக்க நினைத்து சதி நாச வேலைகளில் ஈடுபட்ட எதிரிகளை எமது தலைவரின் வழி காட்டுதலிலும் எமது மக்களின் ஏகோபித்த ஒற்றுமையினாலும் முறியடித்து வந்துள்ளோம்.

எமது தலைவரின் வழியில் எம் மக்களுக்கு நல்ல வழியை விரைவில் உறுதிப்படுத்துவோம். நாம் முன்னைய காலத்தில் எதிரிகளின் பல சதிகளைச் சந்தித்துள்ள போதிலும் இந்த சமாதான காலத்திலும் பாரிய சூறாவளிகளையும் பூகம்பங்களையும் முறியடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் எமது மக்களின் சக்தியோடு தலைவரின் வழி காட்டுதலில் எமது போராட்டத்தில் நிச்சயம் வெற்றியடைவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தியதுடன் இதில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பெருந் தொகையான முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர்.

எமது தலைவரும் எமது மக்களும் மிக நீண்ட பொறுமையை கடைப்பிடித்துள்ளனர். எனினும் இது நீண்ட காலம் நீடிக்காது. யுத்தத்தின் மூலம் எங்களைத் தோற்கடிக்க முடியாதவர்கள் சமாதான சூழ்நிலையைப் பயன்படுத்தி எமது தலைவர்களையும் எமது போராளிகளையும் கொலை செய்கின்றனர்.

அரசாங்கம் எமது எதிர்காலத்தை அழித்து விடலாமென கனவு காண்கிறது. எனினும் இந்தக் கனவு நிறைவு பெறாது. இலங்கை அரசின் கோழைத்தனமான நடவடிக்கை கௌசல்யனையும் மற்றைய போராளிகளையும் எம்மிடமிருந்து பிரித்துள்ளது. அவர் மட்டக்களப்புக்கு பல கனவுகளுடன் திரும்பி வந்தவர். சுனாமியால் பாரிய அழிவைச் சந்தித்த மண்ணை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பேராவலுடன் வந்தவர்.

நன்றி: தினக்குரல்
Reply


Messages In This Thread
[No subject] - by sinnappu - 02-09-2005, 09:58 AM
[No subject] - by Raman - 02-09-2005, 10:02 AM
[No subject] - by வியாசன் - 02-09-2005, 11:26 AM
[No subject] - by Danklas - 02-09-2005, 02:23 PM
[No subject] - by Nilavan - 02-09-2005, 05:33 PM
[No subject] - by Danklas - 02-09-2005, 06:17 PM
[No subject] - by anpagam - 02-11-2005, 01:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)