02-11-2005, 12:16 PM
என்ன லண்டன் கனடாவிலா இந்த வீரர்கள் இருக்கிறார்கள், கீழ் உள்ள புதினத்தின் செய்தியை பாருங்கள்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல!
இரு இளைஞர்களுக்கு வாள்வெட்டு
வவுனியா நிருபர் வியாழக்கிழமைää 10 பெப்ரவரி 2005ää 8:22 ஈழம்
வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலின்போது 17 வயதுடைய இரு இளைஞர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு மின்சாரம் சில நிமிட நேரம் துண்டிக்கப்பட்டு இருந்த வேளையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் இருபது இளைஞர்கள் இந்த மோதலின் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையின்போது தெரிவிக்கப்படுகிறது.
பி.பிரசன்னாää வி.நிரோசன் ஆகிய இருவருமே வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர்.
வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.