02-11-2005, 04:27 AM
தமிழ்நாட்டுப் புலவர் செல்வக் கலைவாணன் என்பவர் அண்மையில் அருமையான பாடல் ஒன்றைப் புனைந்துள்ளார். பாடலின் தலைப்பு மூளையுள்ள தமிழன்!
தமிழ்ப் பற்றைத் தமிழர்கள் பெயரில் தழுவச் செய்ய வேண்டும் என்பது திரைப்படத்துப் பெயர்களுக்கும் பொருந்தும். அந்தப் பாடல் இது.
நன்மாறன் நெடுஞ்செழியன் குமணன்
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி மன்னர் மன்னன்
அன்பழகன் அறிவழகன் கண்ணன் வேலன்
அழகரசன் இளங்கோவன் கீரன் என்றே
இன்சுவையாய் இவைபோல பெயர்கள் உண்டு
இன்று ரமேஷ் சுரேஷ் கார்த்திக் ஆகின்றாரே
தென்னவனின் வழிவந்த என்னவர்க்குத்
தமிழ்ப் பற்றை அவர் பெயரில் தழுவச் செய்வோம்
தன்மான உணர்வென்பார் கவரிமானின் தோன்றலாக
மானுடத்தைப் பெற்றேன் என்பார்.
பொன்நகையில் செம்புதன்னை கலத்தல் போல
பூக்களிடை நச்சுமரம் விளைதல் போல
என்.மாறன் எம்.எஸ்.கே பொன்னன் என்றே
ஆங்கிலத்தில் கலப்படம்தான் செய்கின்றாரே
முன்னெழுத்தைத் தமிழ் எழுத்தால் எழுதச் செய்யும்
மூளையுள்ள தமிழனுடன் நட்புக் கொள்வோம்.
சினிமா மாயையிலும் மோகத்திலும் மூழ்கிக் கிடக்கும் தமிழ் நாட்டுத் தமிழனை மூளையுள்ள தமிழனாக முதலில் மாற்ற வேண்டும். அதே போல் உலகத் தமிழனை மூளையுள்ள தமிழனாக மாற்ற வேண்டும்.
அப்படிச் செய்து விட்டால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகு எங்கும் எதிலும் வானம் அளந்த அனைத்தும் அளந்திடும் எங்கள் தமிழ்மொழி தன்மணம் வீசி இசைகொண்டு வாழும்! தமிழனும் உயர்வான்!
தமிழ்நாதத்தில் இருந்து -நக்கீரன் (கனடா)