Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேலும் புகழ் சேர்க்கும் ஐஸ் அக்கா...!
#11
<b>கொஞ்சம் தமிழும் தெரியும்:</b> <i>ஐஸ்வர்யாராய்</i>

எதிர்காலத்தில் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற மாட்டேன் என்று அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உலக அழகியும், பாலிவுட் ஸ்டார் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

<img src='http://img76.exs.cx/img76/5697/aishwarya5nx.jpg' border='0' alt='user posted image'>

அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் 'லேட் ஷோ' நிகழ்ச்சியில் (சி.பி.எஸ். தொலைக்காட்சி) நடிகை ஐஸ்வர்யா ராய் பேட்டியளித்தார்.

எம்மி விருது பெற்ற லேட் ஷோ நிகழ்ச்சியின் மூலம் முதன் முறையாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு முதன் முறையாக நேரில் பேட்டியளிக்கிறார்.

நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெற்ற லேட் ஷோ நிகழ்ச்சியில் டேவிட், உலகின் அழகான பெண்களில் ஒருவர் என்று குறிப்பிட்டு ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தினார். மேலும், கோடிக்கணக்கான மக்களுக்கு இவரைப் பற்றித் தெரியும், ஆனால் அமெரிக்கர்களுக்கு இன்னும் தெரியாதவராகவே இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

பிரௌன் கலர் ஜாக்கெட், கருப்பு கலர் ஸ்கர்ட், பூட்ஸ் அணிந்திருந்த ஐஸ்வர்யா ராய், டேவிட்டின் கேள்விகளுக்கு சரளமாக பதிலளித்தார்.

பேட்டியில், நாடோடிகளைப் போன்றவர்கள் நடிகைகள். வேலை எங்கேயெல்லாம் அவர்களை இழுத்துச் செல்கிறதோ அங்கேயெல்லாம் போக வேண்டியவர்கள். இருப்பினும் இப்போதிருக்கும் நிலையில் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு காரணம் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை என்றார் ஐஸ்வர்யா ராய்.

தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்', இந்தியா மற்றும் பாலிவுட் குறித்து டேவிட் கேட்ட கேள்விகளுக்கு ஐஸ்வர்யா அசராமல் பதிலளித்தார்.

பேட்டியில், தனக்கு இந்தி, மராத்தி, துளு, கொஞ்சம் தமிழ் என 4 மொழிகளைப் பேசத் தெரியும் என்று கூறி டேவிட்டை பிரமிக்க வைத்தார்.

முன்னர் மும்பையில் ஐஸ்வர்யா பேட்டியளித்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட, இந்தியாவில் பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது பொதுவான ஒன்றா என்ற கேள்வி, இந் நிகழ்ச்சியிலும் கேட்கப்பட்டது.

ஆனால் இந்த முறை ஐஸ்வர்யா இந்தக் கேள்வியை சாதுர்யமாகவும், அதே சமயம் நகைச்சுவை உணர்வுடனும் எதிர் கொண்டார். ''ஆமாம், அதனால் பெற்றோருடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டியதில்லை'' என்று அவர் கூறிய பதில் பார்வையாளர்ளிடம் பலத்த கைதட்டலைப் பெற்றது.

சினிமாவுக்கு நீங்கள் வந்தது எப்படி என்று டேவிட் கேட்டபோது, இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்தது எப்படி என்று திருப்பிக் கேட்டார் ஐஸ். இதனால் பேட்டி எடுத்த டேவிட்டே பதில் கூற வேண்டியதாகி விட்டது. அவர் கூறிய பதில்: இந் நிகழ்ச்சியை நடத்தியவருக்கு ஒரு நாள் உடல் நிலை சரியில்லாததால் நான் நடத்தினேன். அதுவே இப்போது தொடர்கிறது.

ஐஸ்வர்யா நடித்த பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் படத்தின் பிரீமியர் ஷோ நாளை மறுநாள் அமெரிக்காவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
thatstamil
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 01:57 PM
[No subject] - by tamilini - 02-03-2005, 02:08 PM
[No subject] - by Niththila - 02-03-2005, 03:18 PM
[No subject] - by kuruvikal - 02-03-2005, 03:25 PM
[No subject] - by Niththila - 02-03-2005, 03:33 PM
[No subject] - by Mathan - 02-03-2005, 03:39 PM
[No subject] - by Malalai - 02-03-2005, 06:50 PM
[No subject] - by sinnappu - 02-03-2005, 10:02 PM
[No subject] - by tamilini - 02-03-2005, 10:22 PM
கொஞ்சம் தமிழும் தெரியும்: ஐஸ்வர்யாராய் - by vasisutha - 02-10-2005, 03:00 AM
[No subject] - by tamilini - 02-10-2005, 03:48 PM
[No subject] - by shiyam - 02-10-2005, 06:36 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 09:40 PM
[No subject] - by tamilini - 02-10-2005, 09:44 PM
[No subject] - by kavithan - 02-11-2005, 02:13 AM
[No subject] - by வினித் - 01-03-2006, 08:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)