Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அஞ்சலி செலுத்த தமிழ்ச்செல்வன், பானு கிழக்கே விரைவு!
#1
கெளசல்யனுக்கு அஞ்சலி செலுத்த இன்று
தமிழ்ச்செல்வன், பானு கிழக்கே விரைவு!
படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப்டினன்ட் கேணல் கெளசல்யன், ஏனைய மூன்று போராளிகள் மற் றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு ஆகியோரின் புகழுடல்களுக்கு அர சியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேரில் அஞ்சலி செலுத்துவார்.
இதற்காக அவர் இன்று மட்டக்களப்பு மாவட் டத்துக்குச் செல்கிறார்.
கிளிநொச்சியிலிருந்து அவரையும் அவரது அணியினரையும் இன்று மட்டக்களப்பு கரடிய னாறுப் பகுதிக்குக் கூட்டிச் செல்வதற்காக விசேட யஹலிக்கொப்டர் வசதி செய்யப்பட்டிருப்பதாக இலங்கை அரசின் சமாதான செயலக வட்டாரங் கள் தெரிவித்தன.
இந்தப் பயண ஏற்பாட்டு நடவடிக்கை தொடர் பாக அரசினதும், புலிகளினதும் சமாதான செய லகங்களுக்கு இடையில் நேற்றுக் கருத்துப் பரிமாறல்களும், தொடர்பாடல்களும் இடம்பெற் றதை அறிய முடிந்தது.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டத் தளபதி கேணல் சொர்ணமும், மட்டு. - அம்பாறை மாவட்டத் தளபதி கேணல் பானுவும் வன்னியில் தங்கியுள்ளனர். கடந்த வாரம் தத்தமது பொறுப்பு இடங்களிலிருந்து விசேட யஹலிகொப் டர்களில் அவர்கள் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர்.
அவர்கள் தத்தமக்குப் பொறுப்பான மாவட் டங்களுக்குத் திரும்புவதற்கு நாளை யஹலி கொப்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இன்று தமிழ்ச்செல்வன் மட்டக்க ளப்புக்குச் செல்வதால் தளபதி பானுவும் மற்றும் ஐவரும் அவருடன் மட்டக்களப்புக்குச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி சொர்ணம் விசேட யஹலிகொப்டரில் நாளை திருகோணமலை திரும்புவார் எனத் தெரிய வந்தது.
இதற்கிடையில்-
விடுதலைப் புலிகளின் அனைத்து மாவட்ட அரசியல் பொறுப்பாளர்களும் உடனடியாகக் கிளி நொச்சிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார் கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அஞ்சலி செலுத்த தமிழ்ச்செல்வன், பானு கிழக்கே விரைவு! - by Vaanampaadi - 02-09-2005, 11:30 AM
[No subject] - by sinnappu - 02-09-2005, 02:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)