Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் கடுஞ்சீற்றம்! விபரீதங்கள் நேராமல் தடுப்பதில் ....
#1
புலிகள் கடுஞ்சீற்றம்!
விபரீதங்கள் நேராமல் தடுப்பதில்
ராஜதந்திர வட்டாரங்கள் தீவிரம்

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கெளசல் யன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் மூன்று போராளிகள் உட்பட அறுவர் நேற்றுமுன்தினம் இரவு புனாணைப் பகுதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் விடுதலைப் புலிகளின் தலைமையைக் கடுஞ் சீற்றத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.
இந்த மோசமான சம்பவத்தையடுத்து இலங் கைத் தீவில் களேபரங்களும், விபரீதங்களும் நேரக்கூடிய ஆபத்தான ஏதுநிலை ஏற்பட்டிருக்கின் றது. நிலைமையைத் தணிப்பதற்கான தீவிர இராஜதந்திர முயற்சிகள் மேற்குலக வட்டாரங் களில் விரைந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அறியமுடிந்தது.
இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் கைவரிசையே இப்படுகொலைகள் எனப் புலிகள் ஆதாரபூர்வமாக நம்புகின்றார்கள் எனச் சில வட்டாரங்களில் கூறப்பட்டது.
இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைகள், சமூக விரோதக் குழுக்களைப் பயன் படுத்தி - அல்லது அவற்றின் பெயரைப் பயன்படுத்தி - அரச படைகளே இந்தப் படுபாதகச் செயலைப் புரிந்திருப்பதாகப் புலிகள் நம்புவதால், இப்படு கொலைகளுக்குப் பதிலடி தரும் நடவடிக்கை எந்தவேளையிலும், எந்த இடத்திலும் நிகழலாம் என்ற அச்சம் தென்னிலங்கை வட்டாரங்களில் நிலவுவதை உணரக்கூடியதாக இருந்தது.
நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண் டுள்ள - தற்போதைய அமைதி முயற்சிகளின் அனுசரணைத்தரப்பான - நோர்வே மற்றும் சில மேற்குலக வட்டாரங்கள் இப்படுகொலைகளைய டுத்து பதிலடிகளும் விபரீதங்களும் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் பலதரப்புடனும் நேற்று முன்தினம் இரவே தொடர்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டன எனத் தெரியவந்தது.
எனினும், விடுதலைப் புலிகளின் தலைமை யுடன் தொடர்புகொண்டு தெளிவான உறுதி மொழிகளைப் பெறும் முயற்சியில் நேற்று மாலை வரை அவ்வட்டாரங்கள் வெற்றியடையவில்லை என்று அவ்வட்டாரங்களுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவித்தன.
கெளசல்யன் படுகொலை செய்யப்பட்ட பிர தேசம், முறைமை ஆகியவை குறித்தும், அதை யடுத்து எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் விடுதலைப் புலிகளின் தலைமை பல்வேறு மட்டங்களில் நேற்றுக்கூடி ஆராய்ந்ததாக ஒரு தகவல் தெரிவித்தது.
புலிகளைப் பொறுமை பேணவைக்கும் முயற் சியாக நோர்வேத்தரப்பு, மேற்குலக நாடு ஒன்றின் உயர்வட்டாரங்களும் லண்டனிலுள்ள விடு தலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங் கத்துடன் தொடர்புகொள்ள முயன்றதாகத் தெரி கின்றது.
எனினும், இது விடயத்தில் வன்னியில் புலி களின் தலைமையோடு நேரடியாகத் தொடர்பு கொள்வதே பொருத்தமானது என்பது அத்தரப்பு களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அறிய வந்தது.

Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
புலிகள் கடுஞ்சீற்றம்! விபரீதங்கள் நேராமல் தடுப்பதில் .... - by Vaanampaadi - 02-09-2005, 11:27 AM
[No subject] - by sinnappu - 02-09-2005, 02:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)