02-09-2005, 11:25 AM
சுமேரியரும் தமிழரும்
"சேர்யோன் மார்சலும் டாக்டர் ஹாலும் சுமேரிய மக்கள் திராவிட மக்களைத் தோற்றத்தில் ஒத்தவர்கள் எனக் கூறியுள்ளார்கள். இது சுமேரியரும் இந்தியரும் ஒரு தொடர்பி லுள்ளவர்களென்பதை வலியுறுத்துகின்றது. இருமக்களின் தோற்றப்பொலிவும், தலையை அலங்காரம் செய்யும் முறையும் ஒரேவகையின. அரப்பாவிற் கிடைத்த குத்துவாள்கள் சுமேரியரின் அவ்வகை வாளை ஒத்திருக்கின்றன. சுமேரியர் சிந்து மக்களின் நீரருந்தும் கிண்ணங்கள் ஒரே வகையின. சிந்து மக்களின் உருளை வடிவான வெள்ளிப் பாத்திரங்கள் சுமேரியரின் கல்நார்ப் பாத்திரங்கள் போன்றன. இரு மக்களும் வாசனைப்பொடி முதலிய மேனியலங்காரப் பொருள்களை வைக்கப் பயன்படுத்திய சிமிழ்கள் ஒரேவகையின. பூச்செண்டுகள் பூமாலைகளைப் பயன்படுத்தும் வகையும், வழிபாட்டில் மிருகங்களைத் தொடர்புபடுத்தும் முறையும் இரு நாடுகளுக்கு மொத்தன. இரு நாட்டவர்களும் வண்டி செய்யும் முறையைத் தனித் தனி கண்டுபிடித்தார்களெனக் கூற முடியாது. இரு நாடுகளின் வீட்டு அமைப்புக்களையும், முத்திரை வெட்டும் முறையையும், மட்பாண்டங்களின் செம்மையையும் நோக்குமிடத்து மூவாயிரமாண்டுகளின் முன் சிந்துமக்கள் பபிலோனியரை விட உயர்நிலை அடைந்திருந்தார்கள் என்பது புலப்படும். இது இந்திய நாகரிக காலத்தின் கீழ் எல்லையாகும். அதற்கு முற்பட்ட இந்திய நாகரிக காலத்தில் வீற்றினால் பபிலோனிய நாகரிகம் தோற்றியிருத்
***** போயிருத்தல்கூடும்."1
"இன்று காணப்படும் இந்தியன் ஒருவனுடைய முகவெட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன் வாழ்ந்த 20
சுமேரிய மக்களின் வடிவம் போன்றது. இக்கால இந்தியர் கிரேக்கர் இத்தாலியர்களிடையே ஆரியரல்லாத மக்களின் சாயல் காணப்படுகின்றது. உருவச் சிலைகளிலிருந்து அறியுமளவில் பழைய சுமேரியர் இந்தியாவிலுள்ள திராவிட மக்களை உடலமைப்பில் ஒத்திருந்தனர். அக்காலச் சுமேரியன் தமிழை அல்லது அது தொடர்பான மொழிகளை வழங்கும் இன்றைய ஒரு திராவிடனை மிக ஒத்திருந்தான். சுமேரியர் கடல் வழியாலும் தரைவழியாலும் தைகிரஸ் யூபிராதஸ் பள்ளத் தாக்குகளை அடைந்த இந்திய மக்கள் என்பது இருக்கக் கூடாததன்று. இவர்களின் நாகரிகம் இந்தியாவிலே சிந்துநதிப் பள்ளத்தாக்குளில் வளர்ச்சியடைந்திருக்கலாமென்று யான் எண்ணுகின்றேன்.1
உலக மக்களின் பழைய வரலாற்று ஆராய்ச்சியாளர் உலகின் ஆங்காங்கு வசதியும் மக்களின் உடற்கூறு, மொழி, வழிபாடு ஆதியன ஒத்திருத்தலை இவ்வாறு ஆங்காங்குக் காட்டியிருக்கின்றனர். இவை மக்களின் ஒரு பொது உற்பத்தியையும் சிறப்பாகத் தமிழரின் பழமையையும் நன்கு விளக்குவன. மக்கள் வளர்ச்சி நூலார் (Anthropologists) ஓர் ஆதித் தாய் தந்தையரினின்றே உலகமக்கள் பெருகினார்கள் என வலியுறுத்துவர்.
உலகிலே மிகப் பழைய மனித எலும்பு யாவாதேசத்திற் கிடைத்தது. இதன் காலம் ஐந்திலட்சம் ஆண்டுகள் எனப்படுகின்றது. ஆகவே விஞ்ஞானிகள், பூமியின் மத்தியிற்கிடந்த பெரிய கண்டத்திலேயே மக்கள் தோன்றிப் பெருகினார்கள் எனத் துணிகின்றனர். அவ்வாறாயின் பெரிய வெள்ளப்பெருக்கு, பூமத்தியில் விளங்கிய கண்டத்தில் நிகழ்ந்ததாகலாம் எனக் கூறுதல் பிழையாகாது.