Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
த மி ழ் இ ந் தி யா
#9
1. In the 4th century (A. D.) Buddhism declined and there was a Brahmanical revival; and the Brahmans re-edited some of the books on the religious and the civil laws and gave a new and popular shape to them. The old puranas were also recasted about the period and a good many new ones written-collected works of R. G. Bhandarkar Vol. 11, P. 444.
உலகமக்களின் ஓர் உற்பத்திக்குரிய அடையாளங்கள்


கி. மு. 4000 வரையில் உலகமக்களை எல்லாம் ஒரு கூட்டத்தில் இணைப்பதற்குரிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதற்குரிய இரண்டு ஆதாரங்கள் மொழியும், வழி பாடுமாகும். கி. மு. 4000 வரையில் கிழக்குத் தீவுகள் சீனா அமெரிக்கா சுமேரியா பபிலோன் கிரேத்தா சைபிரஸ் முதலிய தேசங்களில் வழங்கிய எழுத்துக்கள் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர் காட்டியிருக்கின்றனர். பிரித்தன் தேசம் முதல் யப்பான்,
காட்டியிருக்கின்றனர். பிரித்தன் தேசம் முதல் யப்பான், அமெரிக்கா வரையில் சூரியத்தம்ப வழிபாடு (சிவலிங்கவழிபாடு) காணப்பட்டது. இவ்விடங்களிலெல்லாம் சர்ப்பமும் இடபமும் பரிசுத்த முடையனவாகக் கருதப்பட்டன. இவ்விரண்டு பெரிய ஏதுக்களால் உலகமக்கள் ஒரு பெருங் கூட்டத்தினின்றும் பிரிந்து ஆங்காங்கு வாழ்ந்தார்கள் என்பது தௌ¢ளிதிற் புலனாகின்றது. இதற்காதாரமாக மேல்நாட்டு வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கூறியுள்ளன சிலவற்றை ஈண்டுத் தருகின்றோம்.

"செம்புக் காலத்தில் கிழக்கே மத்தியதரை முதல் சீனா வரையில் ஒரேவகை நாகரிகம் நிலவியதென விக்ரர் கிறித்தியன் என்பவர் கூறியுள்ளார்.1

"நீலாறு, தைகிரஸ், சிந்து, கங்கை, இந்து ஆசியா, ஒசேனியா முதலிய இடங்களின் தோணிகள் மறந்து போகப்பட்ட மக்களின் நாகரிக இணைப்பை வெளியிடுகின்றன0.2" (இவை ஒரேவகை அமைப்புடையன.)

"அமெரிக்கரின் முன்னோர் ஆரியமக்களுக்கு முந்தியவர்களான துரானிய வகுப்பாரின் மொழியை வழங்கி யோரா யிருத்தல் வேண்டும். அத் துரானியருள் முக்கியம் வாய்ந்தோர் திராவிடர் எனப் பிரிக்கப்பட்டுள்ள மக்களாவர்."

"அமெரிக்க சாதிகளின் பழையமொழி ஒட்டுச்சொற்களை உடையது. சொற்களில் வேறுபட்டிருந்தபோதும் இலக்கண அமைவில் அஃது இந்தியமொழிகளை ஒத்திருக்கின்றது. பழைய சொற்கள் மறைந்து போகப் புதிய சொற்கள் புகுந்திருக்கலாம். ஆனால் மொழி அமைப்பு

14

ஒரே வகையாக இருக்கின்றது. இவ்வினத்தையே ஆப்பிரிக்க, அமெரிக்க, பசிபிக்கிய, யப்பானிய, கோறிய, திராவிட, தாத்தாரிய, பின்னிய, துருக்கிய, பாஸ்க் மொழிகள் சேர்ந்தன."
"ஆராய்ச்சியில் அமெரிக்க சாதிகளும் தென்னிந்தியத் தமிழரும் செமித்திய ஆரிய மக்களினின்றும் வழக்கங்களால் வேறுபட்ட ஒரு பொதுக் கூட்டத்திலிருந்து பிரிந்தார்கள் எனத் தெரிகின்றது."1

"பல தெய்வங்களுடன் சூரியசந்திரக் கடவுளர். திராவிட (துரூயிதிய - Druid)க் கடவுளராவர். பபிலோனிலும் சாலடியாவிலும் சூரியக்கடவுள் வேல்மார்துக்2 எனப் பட்டார். சந்திரத்தெய்வம் இஸ்தார்.3 அவ்வாலயங்களில் நடனமாதர் இருந்தார்கள். பெரிய கிரியைகள் நடத்தப்பட்டன. இந்திய ஆலயங்களில் காணப்படும் தேவதாசி வழக்கு, திராவிட வழக்கைப் பின்பற்றியது. இஸ்தார் ஆலயத்தைச் சூழ்ந்து சோலைகள் இருந்தன. அக்கடவுளின் அடையாளம் மரமாக இருந்தது."

"பகற் (Baal) கடவுளும், பலிபீடமும், இடபமும் (சூரியனைக்குறிக்கும்) சிலுவை அல்லது கற்றூணினால் குறிக்கப்பட்டன. சாலடியரின் கி. மு. 6000-க்கும் கி. மு. 5000-க்கும் இடைப்பட்ட களிமண் தகடுகளில் திருவிட (Drauvada) திராபட (Drapada) என்னும் பெயர்கள் பெரிதும் காணப்படுகின்றன. சாலடியர் தமிழரேயாவர்."4

"திராவிட இடப்பெயர்கள் மெசபெதேமியா, இறான் முதலிய தேசங்களில் காணப்படுகின்றன. மிந்தனி5 என்னுமிடத்தில் பேசப்பட்ட மொழி இக்காலத் திராவிட மொழியுடன் மிகவும் ஒத்துள்ளது."1

"சோட்ஸ் பேண்வூட் என்பவர் அசீரிய கம்பளங்களும் இந்திய கம்பளங்களும் ஒரே வகையாயிருத்தலைக் காட்டி அவர்களின் செமத்தியருக்கும் ஆரியருக்கும் முற்பட்ட பொது உற்பத்தியைப்பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்."

"தென்னிந்திய ஆலயங்களின் அமைப்பும் பழைய அசீரியரின் கட்டிட அமைப்பும் ஒரேவகையாகவுள்ளன. அசீரியரின் கட்டிடங்களிலும் தாமரை மொட்டும் மலரும் போன்ற மாதிரிகள் காணப்படுகின்றன. அசீரிய இந்திய சிற்பக் கலைகளுக்கிடையில் அதிக ஒற்றுமை காணப்படுகின்றது. இவ்விரு மக்களும் ஒரு பொதுக்கூட்டத்தினின்றும் பிரிந்தவர்களாதலின் இவ்வொற்றுமை காணப்படலாம்."2

"தென்னிந்திய ஆலயங்களும் சீனா யப்பான் (Torii) ஆலயங்களும் ஒரே அடிப்படையின் தோற்றங்களாகும். திருத்தமுறாத பியூசியர் (Figians) எகிப்திய இந்திய ஆலயங்களின் மாதிரியைச் சரியாகப் பின்பற்றமாட்டாமையால் கோபுரங்களின்றிக் கோயில்களை அமைத்திருக்கிறார்கள்."

"கீரேத்தா (Crete) பபிலோன் கிழக்கிந்திய தீவுகளில் 3சங்கு வாத்தியங்களும் முத்து அலங்காரமும் கவனிக்கத் தக்கன. பொனீசியர் இவ் வழக்கத்தை மைசீனியரிட மிருந்து பெற்றிருக்கலாம். பிற்காலப் பிராமண புத்த வழக்கங்களுக்கு அடிப்படையாயிருந்த திராவிட வழக்கங்களுள் இது நன்றாக வேரூன்றி யிருந்தது. தற்காலத்தில் இப் பழக்க வழக்கங்களைச் சிலர் பர்மா இந்து சீனா, சீனாயப்பான் வரையும் கொண்டு சென்றனர். பின்பு இவை பசிபிக்கிய தீவுகளுக்குக் கொண்டு போகப்பட்டன. கடைசியில் இவை அமெரிக்கக் கரைகளை அடைந்தன."1

"சிந்து கிழக்குத் தீவுகளின் எழுத்துக்கள் ஒன்று என்று கூறுவதைப்பற்றி ஐயப்பாடு இல்லை. பழைய இந்திய எழுத்து எவ்வாறு பசிபிக்குத் தீவுகளுக்குச்சென்றது என்பதை ஒருவரும் சொல்லமுடியாது. மரக் கட்டைகளில் எழுதப்பட்ட கிழக்குத்தீவு எழுத்துக்களின் காலம் அறியப்படவில்லை. அவர்களின் எழுத்து முழுதும் மறக்கப்பட்டது. இதே எழுத்துக்கள் இந்திய முத்திரைகளிற் காணப்படுவன போலப் பழைய சுமேரியா, சூசா, தைகிரசுக்குத் தெற்கே உள்ள கரைத் தீவுகளிலும் காணப்பட்டன. வரலாறு அயிப்படாத ஒரு மக்களின் நாகரிகம் இங்குக் காணப்படுகின்றது."

"சுமேரியர், இந்திய எழுத்துக்களைச் சுமேரியாவுக்குக் கொண்டு சென்ற இந்திய வியாபாரிகளிடமிருந்து அவைகளை அறிந்திருக்கலாம். அப் பழைய எழுத்துக் குறிகளின் பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவைகளுட் சில வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட சிந்து எழுத்துக்களைப் போல எனக்குத் தோற்றுகின்றன. சிந்து மொழி பேசப் படுகின்றபோதும் எழுதப்படுகின்றபோதும் அதனை முழுதும் அறிந்தவர்கள் சுமேரியர்களேயாவர்."


"பிராமி எழுத்துக்கள் எல்லம் அரப்பா மகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து பிறந்தன. பிராமி எழுத்தைத் தென் செமத்திய பொனீசிய எழுத்துக்களோடு இணைத்த ஆசிரியர்கள் ஒரளவில் சரியாகவே கூறியுள்ளார்கள். இவைகளும் அரப்பா மகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து தோன்றின என்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்கின்றன."1

"சிந்து எழுத்துக்களுக்கும் மேற்கு ஆசிய, கிட்டிய கிழக்குத் தேசங்களின் அரைகுறையான சித்திர எழுத்துக்களுக்கும் தோற்றத்தில் ஒற்றுமை காணப்படுகின்றது. சிந்து எழுத்துக்களை ஆராய்ந்தோர் அவை சுமேரிய, எல். எம். மினோவ, கித்தைதி எழுத்துக்களுக்கு ஒற்றுமையுண்ட என என்பதைக் காட்டியுள்ளார்கள். இவ் வெழுத்துக்களின் அடிப்படை ஒன்றே. இவைகளின் பொது உற்பத்திக்குரிய காலம் புதிய கற்காலமாகலாம். ஓர் எழுத்தையே ஒவ்வொரு வகையாரும் வெவ்வேறு வகையில் விருத்தி செய்தனர்."2


டாக்டர் பாஸ்டவ் (Dr. Basedow) ஆஸ்திரேலியா இந்தியா தெற்கு ஆப்பிரிக்கா என்னும் நாடுகள் தரையால் இணைக்கப்பட்டிருந்தன எனக் கூறுவர். அவர் கூறுவது, "உயிர் நூலார் அக் கண்டத்தை லெமூரியா வென்றும், நில நூலார் கொந்வானா வென்றும் பெயரிட்டுள்ளார்கள். இக் கண்டமிருந்த இடத்திலேயே நாம் ஆதி மக்களின் தொட்டிலைத் தேடவேண்டும்," என்பதாகும்.1

றிவெற்ட் (Revert) என்னும் ஆசிரியர், சுமேரிய ஒசேனிய மொழிகள் மத்தியதரை முதல் அமெரிக்கா யப்பான் தஸ்மேனியாவரையும் சென்று இந்நாட்டு மொழிகளை இணைத்தன எனக் காட்டியுள்ளார்2.

ஆரம்பகாலப் பொத்தகம்3 என்னும் நூலில், எகிப்திய மொழிச் சொற்களோடு ஒற்றுமையுடைய பல மயோரிய (நியூசீலந்து) மொழிச் சொற்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. தேயிலர் (Tailor) என்னும் பாதிரியார் மயோரிய மொழி தமிழுக்கு இனமுடையதாதலை நன்கு விளக்கியுள்ளார்.
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 02-03-2005, 08:13 PM
[No subject] - by aathipan - 02-03-2005, 08:15 PM
[No subject] - by aathipan - 02-03-2005, 08:20 PM
[No subject] - by aathipan - 02-03-2005, 08:22 PM
[No subject] - by aathipan - 02-05-2005, 12:20 PM
[No subject] - by aathipan - 02-05-2005, 12:23 PM
[No subject] - by aathipan - 02-08-2005, 03:24 PM
[No subject] - by aathipan - 02-09-2005, 11:23 AM
[No subject] - by aathipan - 02-09-2005, 11:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)