02-08-2005, 09:57 PM
"அஜித்துடன் இணைந்து நடிக்க மாட்டேன்" - விஜய்
பார்க்க பரம சாது, படத்தில் டீசன்ட் லேது... விஜய்யைப் பற்றி இப்படி சுருக்கமாக இப்படிக் கூறலாம். இல்லாவிட்டால் இத்தனை பிரச்சனைக்குப் பிறகும் 'திருப்பாச்சி' படத்தில், "ஆணவம்ங்கிறது செருப்பு மாதிரி. அத நாம் தான் மிதிக்கணும் அதையே தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுனா, நம்மை மிதிச்சிடுவாங்க" என்று அஜித்தை நினைத்து உரலை இடிப்பாரா?
இது மட்டுமல்ல, 'சச்சின்' படத்திலும் அஜித்துக்கு எதிராக சவுண்ட் கொடுக்கிறார். 'ஆல் ரவுண்டா மட்டும் இருந்தால் பத்தாது ஆட்டத்துல ஆல் ரவுண்டரா இருக்கணும்' என அஜித் கார் ரேஸுக்குப் போனதை வம்புக்கிழுக்கிறார்.
இப்படி படத்தில் வீச்சரிவாள் வசனம் பேசி விட்டு நிஜத்தில், இந்தப் பூனையும் பால் குடிக்குமா எபெக்டில் முகத்தை வைத்து, நாங்க நல்ல நண்பர்கள் என்று டயலாக் பேசுவதில் இளைய தளபதிக்கு நிகர் இளைய தளபதிதான்.
இவரின் இரட்டை வேடத்தை நன்றாக புரிந்துக் கொண்ட அஜித், எதிரின்னா எதிரிதான்... என் நண்பனாகிற தகுதி அவனுக்கு இல்லை என்று நேரடியாகவே அட்டகாசம் பண்ண, இப்போது விஜய்யின் பேச்சில் மாற்றம்.
அஜித்துடன் இணைந்து 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் நடித்த மாதிரி மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "அது மட்டும் இனி நடக்கவே நடக்காது. 'ராஜாவின் பார்வையிலே' வளர்ந்து வர்ற நேரம். அதனால் நடித்தேன். இனி அப்படியொரு காம்பினேஷனுக்கு வாய்ப்பேயில்லை" என்று அடித்து கூறுகிறார்.
சேர்ந்து நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. வில்லனுக்கு சவால் விடும் சாக்கில் சக நடிகர்கள் கழுத்தில் கத்தி வைக்காமல் இருந்தால் அதுவே போதும்!
Cine South

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>