Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரவணக்கம்
#9
இராணுவ பொலிஸ் சீருடை தரித்தவர்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்: தமிழீழ அரசியற்துறை கிளிநொச்சியிலிருந்து தனோஜன்

வெலிக்கந்தை இராணுவ முகாமிற்கும் வாழைச்சேனை புனானை இராணுவ முகாமிற்கும் இடையேயுள்ள பிரதேசத்தில் நேற்று மாலை 7.45 மணியளவில் இராணுவ மற்றும் பொலிஸ் சீருடை தரித்தவர்கள் மறித்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தமிழீழ அரசியற்துறையினர் இன்று வெளியிட்டுள்ள பத்திரிகையறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அவ் அறிக்கையின் முழுவிபரமும் வருமாறு:

சுனாமித் தாக்கத்தின் விளைவாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்கள் தொடர்பாகத் தலைமைப் பீடத்துடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. இ.கௌசல்யன் மற்றும் போராளிகள் பயணித்த வாகனத்தை பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை இராணுவ முகாமிற்கும் வாழைச்சேனை புனானை இராணுவ முகாமிற்கும் இடையேயுள்ள பிரதேசத்தில் நேற்று மாலை 7.45 மணியளவில் இராணுவ மற்றும் பொலிஸ் சீருடை தரித்தவர்கள் மறித்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன் கேணல் கௌசல்யன்ää மேஜர் புகழன் மேஜர் செந்தமிழன் இரண்டாம் லெப்டினன் விதிமாறன் ஆகிய நான்கு போராளிகளுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

அரசியல் பணிக்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினூடாகப் பயணித்த எமது போராளிகள் இரு இராணுவ முகாம்களுக்கு இடையேயுள்ள பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது அப்பட்டமான யுத்தநிறத்த மீறலாகும். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்குமிடையே எய்தப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்த விதிகளை இச்சம்பவம் கேள்விக்குரியதாக்கியுள்ளது. சம்பவம் நடந்த இடம் மற்றும் சீருடை என்பன இக்கொலைகளில் அரச படைகளின் அனுசரணையை சுட்டிநிற்பவையாய் அமைகின்றன.

மனிதநேயப் பணிக்காக பயணித்த போராளிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட இச்சம்பவம் தொடர்பாகவும் இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாகவும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது அவதானிப்பையும் அறிக்கையையும் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தவேண்டும். முன்னெடுத்துச் செல்லப்படும் மனிதநேயப் பணிக்கும் தடைப்பட்டுப் போயிருக்கும் சமாதான முயற்சிகளை மீளத் தொடங்குவதற்கும் இச்சம்பவம் பெரும் பங்கம் விளைவிக்கக் கூடும் என நாம் அஞ்சுகிறோம். இத்தகைய துரோகச் செயல்கள் மூலம் தமிழ் மக்களின் பலத்தை சிதைக்கமுற்படும் சக்திகளை உலகத் தமிழ்ச் சமூகமும் மனிதநேய ஆர்வலர்களும் சர்வதேச சமூகமும் தெளிவாக இனங்கண்டுகொள்ளவேண்டியது அவசியம்.
<b>கௌசல்யன் குழுவினருடன் ஒன்றாகப் பயணித்த முன்னைநாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதஉரிமை ஆர்வலருமான திரு.சந்திரநேரு அரியநாயகம் அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும்.</b> வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து மட்டு அம்பாறை மாவட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விழிப்புடன் செயலாற்றிவந்த இவரது இழப்பு மானுட நேயம்ää மனித உரிமை விழுமியங்களை மதிக்கும் எல்லோருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். <b>இவரது அளப்பரிய சேவையை கருத்திற்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அன்னாரை நாட்டுப்பற்றாளராகப் பிரகடனப்படுத்துகின்றது. அன்னாரது உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
<img src='http://img149.exs.cx/img149/9636/nehru5gs.jpg' border='0' alt='user posted image'>
«Ã¢Â¿¡Â¸õ ºó¾¢Ã§¿Õ.

[b]கௌசல்யனின் வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டனர் </b>

தாங்கள் பயணித்த வாகனத்தைப் பின்தொடர்ந்து இராணுவச் சீருடையில் வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டதாக உயிர் தப்பிய போராளி தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி காயமடைந்த போராளியின் தகவலின்படி தாங்கள் பயணித்த வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்த வான் ஒன்று ஆளரவமற்ற பிரதேசத்தில் தங்களுடைய வாகனத்தை முன்னோக்கி சென்று தங்களது வாகனத்திற்கு குறுக்கே நிறுத்தப்பட்டதாகவும்ää

மேற்படி வாகனத்தில் வந்த அனைவரும் சிறீலங்கா இராணுவச் சீருடையில் இருந்ததாகவும் அவர்கள் தங்களுடைய வாகனத்தில் வந்த அனைவரையும் இறங்குமாறு பணித்ததாக தெரிவித்ததோடுää முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அரியநாயகம் சந்திரநேருவின் பாதுகாப்பிற்கென வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேற்படி நபர்கள் இராணுவச் சீருடையில் இருந்ததால் எந்த எதிர்ப்பும் காட்டவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
[b]

,,,,.
Reply


Messages In This Thread
வீரவணக்கம் - by vasisutha - 02-08-2005, 07:10 AM
[No subject] - by vasisutha - 02-08-2005, 07:19 AM
அஞ்சலிகள் - by ammuu - 02-08-2005, 10:53 AM
[No subject] - by Niththila - 02-08-2005, 03:40 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 03:46 PM
[No subject] - by ramani - 02-08-2005, 04:39 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:53 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 02-08-2005, 05:03 PM
[No subject] - by selvanNL - 02-08-2005, 05:42 PM
[No subject] - by Sriramanan - 02-08-2005, 06:08 PM
[No subject] - by Nilavan - 02-08-2005, 06:18 PM
[No subject] - by sinnappu - 02-09-2005, 02:28 PM
[No subject] - by sri - 02-09-2005, 03:22 PM
[No subject] - by sri - 02-09-2005, 03:26 PM
[No subject] - by Rajan - 02-09-2005, 07:07 PM
வீரவணக்கம் - by vasisutha - 02-10-2005, 08:46 PM
[No subject] - by KULAKADDAN - 02-10-2005, 09:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)