02-08-2005, 11:18 AM
உள்ளாடைகளில் கடவுள் படமா?
இந்துக்கள் கடும் எதிர்ப்பு
வாஷிங்டன், பிப்.8-
பெண்களின் உள்ளாடைகளில் கடவுள் படம் இடம்பெற்று இருப்பதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
உள்ளாடைகளில் `சிவன்' படம்
அமெரிக்காவில், இணையதள நிறுவனம் ஒன்று பெண் களுக்கான உள்ளாடை பற்றிய விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த உள்ளாடை களில் இந்துக்கடவுளான சிவபெருமானின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. ``இந்து என்பதற்காக பெருமைப்படு'' என்பது போன்ற வாசகங்களும் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் `ஓம்' என்ற பெயரிலும் உள்ளாடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்துக்கள் எதிர்ப்பு
இந்த இணையதள நிறுவனத்தின் உள்ளாடைகளில் கடவுளின் படம் இடம்பெற்று இருப்பதற்கு அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பல்வேறு இந்து அமைப்புகளை உள்ளடக்கிய அமெரிக்க இந்துக்கள் தலைமை அமைப்பு உடனடியாக அந்த உள்ளாடைகளை வாபஸ் பெறவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது.
இதே இணையதள நிறுவனம் சீக்கிய மதநம்பிக்கைக்கு எதிரான அடையாளங்களுடன் வெளியிடப்பட்ட உள்ளாடைகளை சீக்கியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சமீபத்தில் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Dailythanthi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>