Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொறுமை சீண்டப்படுகின்றது.
#1
மீண்டும் மீண்டும்
எங்கள்
பொறுமை சீண்டப்படுகின்றது.

மீண்டும் மீண்டும்
கண்மணிகள்
பறிக்கப்படுகின்றது.

சமாதானத்தின் பெயரால்
எங்கள் தலையில்
சோகம் திணிக்கப்படுகின்றது.

எங்கள் பொறுமை
எல்லை கடந்து
எதிரிகளை இல்லாமற் செய்யும்
வெறியாகிறது.

ஆனாலும் ஆனாலும்
தலையை மிஞ்சும் வாலல்லவே
நாங்கள்-

பொறுத்திருக்கின்றோம்
பெருந்திருவே

ஆனாலும்
எங்கள் சின்ன சின்ன
மூளைகளுக்கு

சமாதானம் சமாதானம்
என்று
ஒன்றொன்றாய் இழப்பதிலும்

சண்டையென்று சொல்லி
மொத்தமாய் அழிவதெனிலும்
மானமுள்ளதாய் படுகின்றது.

என்ன செய்வதாய் உத்தேசம்.??
எதுவெனினும்
நாங்கள் தயார்
உன் பின்னால் அணி திரள-

எங்கள் அடலேறுகளை
வீதிகளில் இழக்கின்ற
வேதனைகள் இனியும் வேண்டாம்.

-தயா ஜிப்ரான் -
.
.!!
Reply


Messages In This Thread
பொறுமை சீண்டப்படுகின்றது. - by Thaya Jibbrahn - 02-08-2005, 12:55 AM
[No subject] - by kavithan - 02-08-2005, 01:53 AM
[No subject] - by shiyam - 02-08-2005, 02:39 AM
[No subject] - by வியாசன் - 02-08-2005, 11:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)